Gold Rate: சென்னையில் வெள்ளியின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.


புதிய உச்சத்தில் தங்கம் விலை:


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 59 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. அதன்படி, ஒரு சவரன் விலை 320 ரூபாய் அதிகரித்து 58,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 40 ரூபாய் அதிகரித்து  7,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கி 245 ரூபாயும், சவரனுக்கு 1,960 ரூபாயும் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் கட்டணத்தால், ஆபரண தங்கத்தின் விலை ஏற்கனவே 60 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கி 2 ரூபாய் அதிகரித்து 112 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளி விலை 9 ரூபாய் அதிகரித்துள்ளது.  இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு தங்கமே மிகவும் எளிதான முதலீடாக உள்ளது. ஆனால், ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் விலையால், தங்கம் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது. பங்குச் சந்தையில் தொடர்ந்து நிலவும் வீழ்ச்சி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை மேலும் உயரும் என துறைசார் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


தொடர்ந்து உயரும் தங்கம் வெள்ளி விலை:


தங்கம் என்பது சிலருக்கு ஆடம்பர பொருளாக இருந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலத்தில் உதவும் அத்தியாவசிய பொருளாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆனால், சமீபமாக சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.


குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.