அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நிஜக்கதை என்பதால் இப்படத்தில் பெரியளவில் கமர்ஷியல் சமரசங்கள் அதுவும் இல்லாமல் எதார்த்தத்திற்கு நெருக்கமான படமாக இயக்கியுள்ளார் இயக்குநர். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையிலான காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளன. இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் முன்னணி கோலிவுட் நடிகராக அப்கிரேட் ஆகியுள்ளார் என்றே சொல்லலாம்.
இணையத்தில் கசிந்த அமரன் திரைப்படம்
அமரன் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 42 கோடி வசூலித்து எஸ்.கே கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைத்தது. தற்போது படம் வெளியாகி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் படம் 100 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக வெளியான டாக்டர் , டான் ஆகிய படங்களைத் தொடர்ந்து அமரன் மூன்றாவது 100 கோடி படம். விடுமுறை நாட்கள் முடிந்துள்ள போதும் அமரன் படத்திற்கு திரையரங்கில் நல்ல கூட்டம் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் அமரன் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமரன் திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே அப்படத்தின் எச்.டி பிரதி தமிழ்ராக்கர்ஸ் , டெலிகிராம் மற்றும் இன்னும் சில தளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இப்படத்தின் வசூலில் பெரியளவில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பைரஸியை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் சட்டவிரோதமாக திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவது குறைந்தபாடில்லை. சட்டவிரோதமாக திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் சட்டமும் இந்தியாவில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் படிக்க : Guruprasad : கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட பிரபல கன்னட இயக்குநர்..அழுகிய நிலையில் உடல் மீட்பு
Amaran: இந்தியிலும் மாஸ் காட்டிய SK! அஜய் தேவ்கன் படத்தையே ஆட்டம் காண வைத்த அமரன்!