தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் பக்தியுடன் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று சஷ்டி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறையில் தொடங்கி வரும் சஷ்டி, மகா சஷ்டி என்றும் கந்த சஷ்டி திருவிழா என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டிற்கான சஷ்டி திருவிழா நேற்று முன்தினனம் தொடங்கியது. இதன் காரணமாக அறுபடை வீடு உள்பட உலகெங்கும் உள்ள முருகனின் கோயில்கள் களைகட்டி காணப்பட்டது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.
கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
செய்ய வேண்டியது:
- சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாளான முருகன் திருக்கல்யாணம் வரை சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- விரதத்தை முடிக்கும் வரை தினமும் காலை மாலை இரு வேளை நீராடி, முருகப்பெருமானுக்கு பூஜை செய்ய வேண்டும்.
- சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் வரை அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வருவது சிறப்பு ஆகும்.
- விரதம் இருக்கும் நாட்களில் கந்தபுராணம் உள்ளிட்ட முருக புராணங்களை கேட்பது சிறப்பு ஆகும்.
- சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினசரி கந்தசஷ்டி இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
- சஷ்டி விரதம் இருப்பவர்கள் மது, புகை உள்ளிட்ட பழங்களில் ஈடுபடாமல் இருப்பது அவசியம் ஆகும்.
- தேவையற்ற வீண் எண்ணங்களை தவிர்த்து முருக சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
- விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹார தினத்தில் விரதம் இருப்பது சிறப்பாகும்.
கண்டிப்பாக செய்யக்கூடாதது:
- முருகனை மனதார நினைத்து சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக்கூடாது.
- யாரையும் கோபத்தில் திட்டவும், யாரிடமும் கோபமாக கத்தவோ கூடாது.
- விரதம் இருக்கும் நாட்களில் முடிந்தவரை காலணியை தவிர்ப்பது நல்லது ஆகும்.
- விரதம் இருக்கும் நாட்களில் சோம்பேறித்தனமாகவோ, பகலில் தூங்கவோ தாமதமாக எழுவதோ கூடாது.
சஷ்டி விரதத்தை தொடங்கியவர்கள் வரும் சூரசம்ஹாரம் நாள் வரை விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரத்திற்காக முருகன் கோயில்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.