குருபிரசாத்
கன்னடத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான மாதா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் குருபிரசாத். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறவே அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. தொடர்ந்து தனது இரண்டாவது படத்திற்காக கர்னாடக மாநில விருதினை வென்றார் குருபிரசாத். திரைப்படங்களை இயக்குவது தவிர்த்து நடிப்பின் மீதும் குருபிரசாத் ஆர்வம் கொண்டிருந்தார். ஹுடுகாரு , கல்மஞ்சா , மைலாரி , ஜிகர்தண்டா உள்ளிட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.
கர்னாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா ஊரைச் சேர்ந்த குருபிரசாத் . இவர் மடநாயகனஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறி அருகில் இருப்பர்வகல் காவல் துறைக்கு புகாரளித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு குருபிரசாதின் அழுகிய உடல் தூக்கிட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ள நிலையில் கடன் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். குருபிரசாத் கடைசியாக இயக்கிய படமும் பெரியளவில் தோல்வியை சந்தித்ததும் இதனால் அவர் பெரிய நஷ்டத்தை சந்தித்ததும் இந்த விசாரணையில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.