மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’ . இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. படம் வெளியாகி ஒரு மாத காலம் நிறைவடையும் நிலையில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் ப்ளாக்பஸ்டர்


படத்தின் கதை 


பிரச்சனையில் இருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.


சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்தக் குடியிருப்பில் தினம் தினம் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத காமிக்ஸ் வரைபட கலைஞரான சிவகார்த்திகேயன், ஒரு பிரச்சனையில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது தனக்கு கிடைத்த சூப்பர் பவரை கொண்டு அந்தத் துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார்.


மக்கள் அவரை மாவீரனாக பார்க்கிறார்கள். சூப்பர் பவரை கொண்டு சிவகார்த்திகேயன் மாவீரனாக அவர் மக்களை காத்தாரா? இல்லை மக்களுக்கான உரிமைப் போரில் தோற்றாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.


வசூல் வேட்டை


பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றியா தோல்வியா என்கிற சந்தேகத்தை கொடுத்து வந்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை மட்டுமில்லை வசூலையும் வாரி குவித்தது. கிட்டத்தட்ட  கணிசமான நாட்கள் திரையரங்குகளின் ஓடிய இந்தப் படம் உலகளவில் ரூ.75 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது


மிஸ் பண்ணிட்டீங்களா பரவாயில்லை






திரையரங்குகளில் இந்தப் படத்தை  பார்க்க தவறவிட்டவர்கள் இன்னும் சில நாட்களில் தங்கள் வீட்டிலேயே படத்தைப் பார்க்கலாம். வருகின்ற ஆகஸ்ட் 11-ஆம் தேதி அமேசான் பிரைமில் மாவீரன் படம் வெளியாக இருக்கிறது. படத்தின் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் சிறப்பாகவே அமைந்திருப்பதால் ஒரு முறை பார்த்துவிட்டவர்கள் இன்னும் சில முறை படத்தைப் பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.