விஜய் டிவியில் 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட மிகவும் பிரபலமான  ரியாலிட்டி ஷோ 'கலக்க போவது யாரு'. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு காமெடி கிங் என்ற பட்டம் வழங்கப்படும். மிமிக்கிரி, ஸ்டாண்ட் அப் காமெடி உள்ளிட்ட ஏராளமான திறமைகளை நகைச்சுவையா வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவலை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த ஷோ பார்வையாளர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. 


'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இன்று மிகப்பெரிய செலிபிரிட்டிகளாக இருந்து வருகிறார்கள். ரோபோ ஷங்கர், சிவகார்த்திகேயன், ஆதவன், பாலா, அசார், டி எஸ் கே, ராமர் மற்றும் ஏராளமானவர்கள் இந்த நிகழ்ச்சி மூலம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்கள்.


 



அந்த வகையில் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்து சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின்னர் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் எப்படி  'கலக்க போவது யாரு' ஆடிஷனில் கலந்து கொண்டார் என்பதை சிவகார்த்திகேயனின் அக்கா கௌரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. 


சிவகார்த்திகேயனின் அக்கா பிரசவத்திற்காக ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருந்த சமயத்தில் அவருடைய அம்மாவும் அக்காவுக்கு உதவியாக உடன் இருந்துள்ளார். அப்போது சென்னையில் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக எம்.பி.ஏ இன்டர்வியூவுக்கு போயிட்டு வரேன் என பொய் சொல்லி விட்டு சென்னைக்கு வந்துள்ளார் சிவகார்த்திகேயன். 


 



அக்காவுக்கு மகன் பிறந்த நேரம் தாய் மாமா சிவகார்த்திகேயனுக்கு  'கலக்க போவது யாரு' ஆடிஷனில் செலெக்டாகி விட்டார். ஊர் திரும்பிய பிறகு ஒரு நாள் சிவகார்த்திகேயன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது டிவியில்  'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் ப்ரோமோ வந்துள்ளது. சாலமன் பாப்பையா குரலில் சிவா பேசுவது ப்ரோமோவில் வந்துள்ளது. அதை பார்த்த அவரின் அம்மா "ஏய் கௌரி இங்க பாரேன்... இவன மாதிரியே இருக்கான்" என அக்காவிடம் சொல்ல திருதிரு என முழித்த சிவகார்த்தியேன் நைசாக உள்ளே ஓடிவிட்டாராம். 


 






இப்படி பொய் சொல்லிவிட்டு வந்து ஆடிஷனில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் தான் அந்த சீசன் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின்  டைட்டிலை வென்றார்.