நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திர தின விழாவை கொண்டாடிவருகின்றனர். நடிகர் ரஜினி தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றிய பின் வரிசையாக பல பிரபலங்கள் தங்கள் வீட்டில் கொடியை ஏற்றினர். நடிகைகளும் வழக்கமாக கொடியை கைகளில் ஏந்திய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சோஷியல் மீடியாக்களில்
பகிர்ந்துள்ளனர்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிக்கும் சிவகார்த்திகேயன் “எல்லோரும் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
மண்டேலா படத்திற்காக தேசிய விருது பெற்ற மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவா நடித்துவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விருமன் நாயகி அதிதி சங்கர் நடிக்கிறார்.
மாவீரன் படத்தில் மிஷ்கிம் மற்றும் கவுண்ட மணி நடிக்கவுள்ளனர்.பின் நீண்ட வருடங்களுக்கு பின் கவுண்ட மணி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சில நாட்களுக்கு முன், இவர் நடிக்கும் மற்றொரு படமான ப்ரின்ஸின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படம் அனுதீப் இயக்கத்திலும் தமன் இசையிலும் உருவாகவுள்ளது. நேற்று நடைப்பெற்ற தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் பைனல்ஸில் நடிகர் சிவா கலந்து கொண்டு அதில் வெற்ற பெற இருவருக்கு அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.
Also Read : Celebs Independence Day: ‛இந்திய தேசமிது... ரத்தம் சிந்திய தேசமிது...’ சுதந்திரத்தைப் போற்றிய பிரபலங்கள்!
சுதந்திர தின நாளில் மத்திய அரசை கடுமையாக சாடிய பி.சி.ஸ்ரீராம் - அப்படி என்ன சொன்னார்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்