நாடு முழுவதும் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்ட ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். மேலும் மாநிலங்கள் முதல் கிராம பஞ்சாயத்துக்கள் வரை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 
 
இது 75வது சுதந்திர தினம் என்பதால் அதனை சிறப்பாக கொண்டாட அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து மக்களும், பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டனர். அதேசமயம் பல பிரபலங்களும் சுதந்திர தின வாழ்த்துக்களை தங்களது ரசிகர்களுக்கு தெரிவித்தனர். 






இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், நான் என் நாட்டை நேசிக்கிறேன். ஆனால் அரசை அல்ல...ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார். இது மத்திய அரசின் மீதான வெறுப்பை காட்டுவதாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை விமர்சித்து சிஸ்டம் மீதான நம்பிக்கை கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அவர்களின் ஒவ்வொரு செயலிலும் திமிரின் மொழி தெரிகிறது என பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண