நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் அஜித் குமாருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement


அஜித்தின் துணிவு :


அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் டப்பிங் தொடர்பான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.  இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறது. வாரிசு படமானது பொங்கல் ரிலீஸிற்காக ரெடியாக உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் பல தியேட்டர்கள் பொங்கலுக்கு தங்களது திரையரங்கில் துணிவு படம் வெளியாவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக பதிவுகளை வெளியிட்டனர். இதனால் தங்களது ஊர்களில் எந்தெந்த தியேட்டர்களில் படம் ரீலிசாகப் போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 






இதேபோல் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நேர்காணல்களில் அவரிடம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலையீட்டால், வாரிசு படத்தை விட துணிவுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்துள்ளதாமே என கேள்வி கேட்கப்பட்டது. அதனை மறுத்த உதயநிதி அப்படியெல்லாம் இல்லை. இரு பெரிய நடிகர்களின் படங்கள் என்பதால் சமமான தியேட்டர்கள் தான் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம் மொத்தமுள்ள 1200 தியேட்டர்களில் 700 துணிவு படத்துக்கும், 500 வாரிசு படத்துக்கும் கிடைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.  சமீபத்தில், தனது மனைவியான ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.


சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் : 


தீபாவளியையொட்டி, சர்தார் மற்றும் ப்ரின்ஸ் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. இந்த இரண்டு படத்தில், சர்தார் படம் 100 கோடி வசூலை கடந்து  நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்திற்கு போட்டியாக வெளியான ப்ரின்ஸ் சர்தாரிடம் தோற்று போனது. இந்த நிலையில், ப்ரின்ஸ் படம்  வரும் 25 ஆம் தேதி ஹாட்ஸ்டார்  ஓடிடி தளத்தில் வெளியாகிறது.






ப்ரின்ஸ் படத்தை அடுத்து, மண்டேலா டைரக்டர் இயக்கும் “மாவீரன்” படத்திலும் ரவிகுமார் இயக்கும் “அயலான்” படத்திலும் நடித்து வருகிறார்.  தற்போது, சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏகேவை சந்தித்தேன். இந்த சந்திப்பு நிகழ்வை வாழ்க்கை முழுவதிலும் என் நினைவில் வைத்திருப்பேன்.பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்.” என்று பதிவிட்டுள்ளார்.