கன்னட ரசிகர்களால் ‘அப்பு’ என கொண்டாடப்பட்டவர் நடிகர் புனீத் ராஜ்குமார். கடந்த வெள்ளிக்கிழமை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபொழுது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல் நாள் வரையில் படத்தின் புரமோஷன் வேலைகள், ஆக்டிவான தினசரி வாழ்க்கை என இருந்த புனித் ராஜ்குமாரின் மரணம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. திரையுலக நண்பர்கள் , ரசிகர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் , குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிஅக்ர் சிவகார்த்திகேய கர்நாடக மாநிலத்திற்கு சென்று  அங்குள்ள புனீத்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமார் மற்றும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.






அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் “ஒரு முறை மேடையில் நான் ரஜினி சார் போல பேசியதற்கு தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து பாராட்டினார். மேலும் ஒரு மாதங்களுக்கு முன்பு அவரிடம் தொலை பேசியில் பேசும் பொழுது , பலமுறை வீட்டுக்கு வாங்க என்றார், அவ்வளவு இனிமையான மனிதர் .ஆனால் இப்படியான நிலையில் அவரின் வீட்டிற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. புனீத் ராஜ்குமாரின் சகோதர சிவராஜ் குமாரின் பாடல் ஒன்றில் நடித்துள்ளேன் ..அவரிடம் கூட இதனை கூறினேன்..என்னால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..இந்த அதிர்ச்சியில் இருந்து நான்  மீண்டு வருவதற்கே நேரம் ஆகும்.  அவர் ஒட்டுமொத்த சினிமாவிற்குமான இழப்பு..சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்தவர் அவர். அவர் என்னை போன்ற மற்ற நடிகர்களுக்கு முன் உதாரணம்.அவர் மறைந்தாலும் அவர் செய்த சேவைகள் அவரை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும் “ என்றார்


அதேபோல நடிகர் பிரவும் நேரில் சென்று , புனீத் ராஜ்குமார் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க நடிகர் விஷால் புனீத் ராஜ் குமார் உதவியால் படித்து வந்த குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாகவும் அறிவித்தார். புனீத் ராஜ்குமார் நடிப்பு மட்டுமன்றி, தான் சம்பாதித்த பணங்களில் மூலம் ஏழை , எளியோருக்கு பல உதவிகளை செய்தவர் . குறிப்பாக பல குழந்தைகளின் கல்விக்கட்டணைத்தை தானே ஏற்று படிக்க வைத்துக்கொண்டிருந்தார். திடீரென அவர் மறைந்த நிலையில் அந்த குழந்தைகளில் 1800 பேரின் கல்விக்கட்டணைத்தை அடுத்த ஆண்டு முதல் நான் ஏற்றுக்கொள்கிறேன் என விஷால் தெரிவித்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள எனிமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் புனித் ராஜ் குமாரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல் நல்ல நண்பராகவும் தெரியும் அவரை போன்றதொரு பணிவான சூப்பர் ஸ்டாரை நான் கண்டதில்லை. நிறைய சமூக பணிகள் செய்து வந்தவர். அவர் படிக்க வைத்த 1800 குழந்தைகளுக்கான இலவச கல்வி செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.