இந்தியாவில் ஒடுக்கப்படும் மக்களின் ஒற்றை முழக்கமான `ஜெய் பீம்’ என்பதைத் தலைப்பாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது சூர்யா நடித்த  திரைப்படம். தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் மிகக் குறைவாகவும், சமூகத்தாலும் அரசு அமைப்புகளாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் இருளர் பழங்குடியினர் குறித்த அரசியல் கதையாக உருவாகியிருக்கிறது `ஜெய் பீம்’. இந்நிலையில் படத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.


“பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன்விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு!
சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். 






“சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த சூர்யா, ஞானவேல் ஆகியோருக்கு பெரும் நன்றிகள்” என இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். 






 “ஜெய் பீம் ஒரு முக்கியமான படம் மற்றும் சரியாக கொண்டாடப்பட வேண்டும்”என இயக்குநர் ஞானவேல் மற்றும் சூர்யாவுக்கு நடிகர் அசோக் செல்வன் பாராட்டு தெரிவித்துள்ளார். 






 


படம் பற்றி நல்ல விமர்சங்களைக் கேட்க முடிகிறது. இந்த படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை பெற்றுத் தரட்டும் என நடிகர் சிவ கார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். 






சூர்யாவின் சிறந்த படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் நடித்ததற்காகவும் தயாரித்ததற்காகவும் நீங்கள் எப்போதும் பெருமைப்படலாம் என நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார். 






இவைத்தவிர பல்வேறு தரப்பினரும் ஜெய் பீம் படத்தைப் பாராட்டி வருகின்றனர். சூரரைப் போற்று படம்தான் உங்களுடைய சிறந்த படமாக இருக்கும் என நினைத்தேன்.  இந்த ட்வீட்ட போடும்போதே கண் கலங்குது என பதிவிட்டுள்ளார். 






குரலற்றவரின் குரலாக ஜொலிக்கும் அண்ணன் "சூர்யா"... இந்த "ஜெய் பீம்"ஐ விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை... நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை முழுவதும் ஒருவிதமான சோகத்துடன் ஆக்கிரமித்த படம். 






நல்ல படங்கள் வரும்போது அதை  கொண்டாட வேண்டியது நம்மோட கடமை ...  அப்படி தவிர்க்கவே கூடாத படம் #ஜெய்பீம்   படக்குழுவினருக்கு வாழ்த்துகள். 






 “ஜெய்பீம் படத்த எடுக்குறதுக்கும் அதுல நடிக்கிறத்துக்கு ஒரு தில்லு வேனும்...”  என சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.









“படம் பார்த்து கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் சூர்யா ஜெயித்துவிட்டார்”






இதையும் படிக்க:


`Jai Bhim' review | எப்படி இருக்கிறது `ஜெய் பீம்’? நேர்த்தியான... நேர்மையான விமர்சனம் இதோ!