டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படமும் 100 கோடி வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்துள்ளது.
அடுத்தடுத்து சிகா படங்கள் சாதனை...
12ஆவது நாளான இன்று இப்படம் இச்சாதனையை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் திரைத்துறையினரும் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த 13ஆம் தேதி சர்வதேச அளவில் டான் படம் ரிலீஸானது.
எல்லா செண்டரிலும் பிளாக்பஸ்டர் ஹிட்
இந்தப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக காணப்பட்டன.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தைத் தொடர்ந்து டானும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் முன்னதாக கேக் வெட்டிக் கொண்டாடினர்.
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் டான் படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நன்றி தெரிவித்த இயக்குநர்
இந்நிலையில் 100 கோடி வசூல் சாதனைக்கு நன்றி தெரிவித்துள்ள படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ”கனவுகள் நனவாகின்றன, இதனை நிகழ்த்திக் காட்டிய பார்வையாளர்களுக்கு நன்றி” என மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்