சிவகார்த்திகேயன் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் மதராஸி. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

மதராஸி வசூல் எவ்வளவு?

ஏனென்றால், ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து தோல்வி படங்களாகவே அளித்து வந்தார். மேலும், அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பும் அதற்கு ஒரு காரணம்.

நேற்று வெளியான மதராஸி படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இந்த படம் முதல் நாள் மட்டும் ரூபாய் 13 கோடி வசூல் செய்துள்ளது. காலைக் காட்சிக்கு 46.22 சதவீதம் பேரும், மதியம் காட்சிக்கு 62.04 சதவீதம் பேரும், மாலை காட்சிக்கு 63.21 சதவீதம் பேரும், இரவுக் காட்சிக்கு 77.04 சதவீதம் பேரும் திரையரங்கில் கண்டு களித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் எங்கு அதிக கூட்டம்?

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சியில் 81 சதவீதம் இருக்கைகள் நிரம்பிய காட்சிகளாக ஓடியது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் நேற்று 77 சதவீதம் இருக்கைகள் நிரம்பிய காட்சிகளாக ஓடியது. 

மதுரையில் 55.50 சதவீதமும், திண்டுக்கல்லில் 62.25 சதவீதமும், கோவையில் 69.25 சதவீதமும், பாண்டிச்சேரியில் 66.75 சதவீதமும், சேலத்தில் 63.50 சதவீதமும், திருவனந்தபுரத்தில் 54.75 சதவீதமும், மும்பையில் 46 சதவீதமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக மதராஸி. 

சென்னையில் மட்டும் இத்தனை காட்சிகளா?

தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக சென்னையில் 597 காட்சிகள் மதராஸி படம் ஓடியது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரில் 356 காட்சிகள் மதராஸி படம் திரையிடப்பட்டது. கோவையில் 206 காட்சிகளும், மதுரையில் 139 காட்சிகளும் மதராஸி படம் திரையிடப்பட்டது. 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சுமாரான வசூல் பெற்று வருகிறது. நேற்று வாரங்கல்லில் மட்டும் 33.25 சதவீதம் இருக்கைகள் நிர்மபிய காட்சிகளாக ஓடியது. பெங்களூரில் தெலுங்கில் 16.25 சதவீதம் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடியது.

ஆக்ஷன் மசாலா:

விறுவிறுப்பான ஆக்ஷன் திரைக்கதை கொண்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருப்பார். வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்திருப்பார். இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லக்கல் நடித்துள்ளனர். சுதீப் எலமோன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. காமெடி கதாநாயகனாக உலா வந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற குடும்ப படங்கள், ரெமோ, மான் கராத்தே போன்ற காதல் படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில் அமரனுக்கு பிறகு அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் வசூல்:

கோட் படத்தில் துப்பாக்கியை விஜய்யிடம் இருந்து வாங்கும் காட்சிக்கு பிறகு அதிகளவில் விமர்சிக்கப்பட்டார். ஆனால், அமரன் வெற்றி அனைத்திற்கும் பதிலடியாக அமைந்தது. தற்போது மதராஸி படம் சிவகார்த்திகேயனை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியுள்ளது.  இன்றும் நாளையும் இந்த படத்திற்கு மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.