India US Trade: அமெரிக்காவின் கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாம்.

Continues below advertisement

அடித்துச் சொல்லும் நிதியமைச்சர்:

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா அதிகப்படியான வரி விதித்தாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது என்பது தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். இதுவே மிகவும் செலவு குறைந்த நடவடிக்கை எனவும் விளக்கமளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, தனது சொந்த பொருளாதார சூழலுக்கு ஏற்பவே செயல்பட முடியும். மேலும், “எந்த விநியோகம் நமக்கு பொருந்தும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.எனவே, எந்தவித சந்தேகமும் இன்றி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

”தேவைகளுக்கு ஏற்ப வாங்குவோம்”

தொடர்ந்து பேசுகையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி செலவின விகிதத்தில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் கணிசமான பங்கை வகிக்கின்றன. மேலும், “ரஷ்ய எண்ணெயாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, விலைகள், தளவாடங்கள், எதுவாக இருந்தாலும் சரி, நமது தேவைகளுக்கு ஏற்ற இடத்திலிருந்து வாங்குவதே எங்கள் முடிவு” என நிதியமைச்சர் தீர்க்கமாக பேசியுள்ளார்.

ட்ரம்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் சீதாராமன் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உள்ளிட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தாக்கத்தை குறைக்க உதவும் என்று கூறினார். மேலும், சாத்தியமான வரியின் தாக்கம் ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களால் ஈடுசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.

ட்ரம்புக்கு நோஸ்கட்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்தார். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெயை மத்திய அரசு கொள்முதல் செய்வது உக்ரைனில் மாஸ்கோவின் போருக்கு நிதியளிக்க உதவுகிறது என்று குற்றம்சாட்டினார். ட்ரம்ப்ன் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் இந்தியாவின் மீது ஏராளமான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் சிக்கலடைந்தது.

இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை குறிப்பிட்டு, இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என தனது அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வரி அழுத்தங்கள் மூலமும், நட்பு பாராட்ட விரும்புவது போன்றதுமான செயல்பாடுகளால், இந்தியாவை தனது விருப்பத்திற்கு இணங்கச் செய்ய ட்ரம்ப் தீவிரம் காட்டி வந்தார். ஆனால், கூடுதல் வரி விதித்தாலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.