கோலமாபு கோகிலா என்னும் வெற்றி படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் படைப்பில் வெளியான திரைப்படம் ; டாக்டர்’ .சிவகார்த்திகேயன் தனது SK புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க யோகி பாபு, ரெடின் கின்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நடித்துள்ளனர். படத்தில் ஒயிட் காலர் வில்லனாக வினய் வலம் வருகிறார். ஹூமன் டிரஃபிக்கிங் என கூறப்படும் மனித கடத்தலை மையமாக வைத்து டார்க் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் உள்ள திரையங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. 100 கோடியை தாண்டி படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை குவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவிலும் கூட படம் வெளியாகி 440000 டாலருக்கும் அதிகமான அளவில் வசூல் செய்திருந்தது.இதுவரையில் அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை டாக்டர் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. டாக்டர் படத்தின் வசூல் 100 கோடியை தாண்டிய நிலையில் தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளாராம் நடிகர் சிவகார்த்திகேயன். இதுவரையில் 20 முதல் 25 கோடி என்ற அளவில்தான் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாராம் சிவகார்த்திகேயன். டாக்டர் படம் அவருக்கு ஜாக்பாட்டாக அமைந்து போனது. இனி சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால் நம்பி பார்க்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது டாக்டர். எனவே சம்பளத்தை உயர்த்த இதுவே சரியான நேரம் என முடிவு செய்த சிவா, தற்போது 30 கோடியை நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் மேடை கலைஞராக மீடியாவில் காலெடி எடுத்து வைத்த சிவா, விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கினார்.ஒரு ஷோவில் சிவகார்த்திகேயன் களமிறங்கிவிட்டால் , அதனை பார்க்கும் ஆடியன்ஸை தனது கண்ட்ரோலில் வைத்துக்கொள்ளும் வித்தை தெரிந்தவர். அசராத பேச்சும் , ஹூமர் சென்ஸ் நகைச்சுவையும்தான் சிவகார்த்திகேயனின் கூடுதல் பிளஸ். அதன் பிறகு மூனு படத்தில் தனுஷின் நண்பனாக வெள்ளித்திரையில் தலைக்காட்டிய சிவகார்த்திகேயன் டாக்டர் என்னும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கும் அளவிற்கு தனது தனித்திறமையால் முன்னேறியுள்ளார்.அவர் மேலும் பல ஹிட் படங்களை கொடுக்க வாழ்த்துக்கள் !