Fahad Faasil | 'மிகவும் இளமையானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: கமலுக்கு ஃபஹத் ஃபாசில் வாழ்த்து!

malayalam actor fahad faasil wishes to Kamal Hassan on his 67th birthday

Continues below advertisement

நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 67வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement


இந்நிலையில் மலையாள நடிகர் கஃபஹத் ஃபாசில் தனது ஃபேஸ்புக் பதிவில் கமலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், "செட்டிலேயே மிகவும் இளமையானவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். கதைகளுக்கும், சிரிப்புக்கும், அன்புக்கும், கற்றுத் தந்த பாடங்களுக்கும் நன்றி. படங்களை உருவாக்குவதற்கு நன்றி. இந்திய சினிமாவை நிறைவு செய்வதற்கு நன்றி. எல்லாவற்றிலும் உங்களுக்கு நல்லதே நடக்க விழைகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் கமல் சார்" என தெரிவித்துள்ளார். 

லோகேஷ் கனகரா இயக்கத்தில் உருவாகும்  விக்ரம் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  "ஆரம்பிக்கலாமா? " என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் செட்டில் இளமையானவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார் ஃபஹத்.  

முன்னதாக இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்ட்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு உதவி இரத்த தானம் ஆகியவற்றை செய்ய வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களுக்கு கமல் அறிவுறுத்தியிருந்தார்.  இந்நிலையில் இன்று சென்னையில் கனமழை பெய்து வருவதால்., மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் என மக்கள்நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   

 

Continues below advertisement
Sponsored Links by Taboola