Sivakarthikeyan Tollywood Entry : "நான் தெலுங்கு டப்பிங்ல ரொம்ப பிஸி" - சிவகார்த்திகேயன் டோலிவுட் என்ட்ரி  


அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 


டோலிவுட் என்ட்ரி:


சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகமாவதால் பிரின்ஸ் படத்திற்காக டப்பிங் பேச உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 


பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன்:


ஒரு தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடர்ந்து இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார் சிவகார்த்திகேயன். தொகுப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது நேரடியாக டோலிவுட்டில் பிரின்ஸ் திரைப்படம் மூலம் நுழைவது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது.



மும்மரமாக நடைபெறும் தெலுங்கு டப்பிங்: 


தெலுங்கில் சரளமாக பேசுவதற்காக பல நுட்பங்கள் கற்று கொண்டு இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பல டப்பிங் தெலுங்கு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் இந்த பிரின்ஸ் திரைப்படம் தான் நேரடியாக அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


பிரின்ஸ் படப்பிடிப்பு:


பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நாடு, ஹைதராபாத்  மற்றும் பாண்டிச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் அனுதிப் :


தெலுங்கில் நவீன் பாலிஷெட்டி நடித்த ஜாதி ரத்னாலு என்ற திரைப்படத்தை இயக்கியவர் அனுதீப். இந்த நகைச்சுவை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சகர்களின் பாசிட்டிவ் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் திரைப்படங்கள் :


சமீபத்தில் எஸ்.கே. புரோடக்ஷன்ஸ் பேனரின் கீழ் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சூரி நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படம் "மாவீரன்". இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியுள்ளது. இப்படத்தில் மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அயலான். அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மிகவும் பிஸியாக நடித்துவருகிறார்.