நாள்: 09.08.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை

இராகு :

காலை 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

குளிகை :

காலை 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 9.00 மணி முதல் மாலை 10.30 மணி வரை

சூலம் –வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்று  கோயிலுக்கு செல்லுதல் மற்றும் பக்தி ஈடுபாடு இன்று உங்களுக்கு நன்மை அளிக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. இன்று பணியில் மூழ்கி இருப்பீர்கள். நீங்கள் செய்யும் பணியில் அறிவாற்றல் பெறுவதன் மூலம் நன்மை விளையும்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, இன்று  பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். இந்து முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.பணியிடத்தில் இது மகிழ்ச்சியான நாளாக இருக்காது. நீங்கள் தவறு செய்ய வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்கவும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு வளர்ச்சி தரும் பயனுள்ள செயல்களில் பங்கு கொள்ளுங்கள். பங்கு வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபம் தரும். பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள். பணியில் நற்பெயர் பெறுவீர்கள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியை பெற்றுத் தரும். நீங்கள் அதிக அறிவாற்றலை பெறுவீர்கள். உங்களிடம் தொழில் சார்ந்த அணுகுமுறை காணப்படும். இதனால் பணியில் திறம்பட செயலாற்றுவீர்கள். சரியான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் காணப்படும்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, இன்று  பரபரப்பாக இருக்கும். யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நன்மை விளையும். இன்று பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. பணத்தை எச்சரிக்கையாக கையாளவும்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே, இன்று  சில தடைகளைக் கடந்து பணியில் வெற்றி பெறுவீர்கள். இன்று அதிக முயற்சி எடுக்க வேண்டும். பண வரவுடன் செலவும் இணைந்து காணப்படும். உங்கள் தேவைகளை முன்னுரிமைப் படுத்தி அதன்படி செயலாற்றுங்கள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, உங்கள் தேவை அறிந்து அமைதியாக செயல்படுங்கள். உடனடியாக உங்கள் விளைவுகளுக்கு பலன் கிடைக்காவிடில் நம்பிக்கை இழக்காதீர்கள். இன்று நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. கனிசமான இருப்பை பராமரிக்க தடைகளை எதிர்கொள்வீர்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே, இன்று பொதுவாக இன்று சிறப்பான நாள். உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று நிதிநிலைமை சிறப்பாக உள்ளது. இன்று பணவரவு காணப்படும்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, இன்று கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்சிகள் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிகமாக சிந்திப்பதை தவிர்த்திடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த வகையில் நிதிநிலைமை காணப்படாது. பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

மகரம் :

மகர ராசி நேயர்களே,  உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து அதன்படி செயல்படுங்கள். அதிக பொறுப்புகள் காரணமாக மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். தேவையற்ற செலவுகளை கண்காணிக்கவும்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, இன்று நன்மை விளையும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். சில விருப்பங்கள் இன்று நிறைவேறலாம். பணம் அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே, இன்று நீங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டியிருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக இன்று நீங்கள் பணியில் மூழ்கியிருப்பீர்கள். நிதிநிலையில் ஏற்றத்தாழ்வு காணப்படும். இன்று அதிக செலவுகளை எதிர் கொள்ள நேரும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண