அயலான் படத்தின் மூன்றாவது பாடலான சூரோ சூரோ பாடல் வெளியாகியுள்ளது.


அயலான்






ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அயலான் படத்தில் இருந்து இதுவரை வேற லெவல் சகோ மற்றும் அயலா அயலா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தில் மூன்றாவது பாடலான சூரோ சூரோ பாடல் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ள நிலையில் மோஹித் செளஹன் மற்றும் நகுல் அப்யங்கர் இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். சிவகார்த்திகேயன் ம, ரகுல் ப்ரீத் மற்றும் ஏலியன் என மூன்று பேர் இணைந்து  நடனமாடும் பெப்பியான பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.


மின்னல் மழை உதிரத்தான்


மண்ணே அதில் அதிரத்தான்


வந்தேன் என அறிவித்தான்


சூரோ சூரோ சூப்பர் ஹீரோ


 


எல்லா எல்லா எல்லா


இன்ஃபினிட்டிக்கள்ளும்


அழகா, அழகா ,அழ்கா


உன் கையில் வந்தாச்சோ..?


உலக உலக உலகையே


நொடியில மாத்த


விரல விரல விரல


 நீ சொடக்குவியோ..?


லோ லோ லோ லோக்கல் வேணா


நீ உயிர்ந்தெழுந்த அயன் மேனா


ஃபஃபரிஃபா சூட்ட மாட்டிக்கோ


கொ கொ கொ கோவம் பாரு 


நீ இமைச்சாலே அதிருது ஊரு


விடும் மூச்சு 


கதிர் வீச்சு


எதிரிக்கும் முடிவு ஆரம்பமாச்சு


ஏ டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க


சிந்தசைஸர் துடிக்க


எதிர்காலம் படைக்க


தமிழ் சூரோ சூரோ வாராரோ...


எத்தனையோ சக்தி உன்னில் கொட்டிக் கிடக்க


அட எல்லா கண்டுபிடிச்சிட்டா பூமீ உனக்கு


நீ செத்து பொழச்சதுக்கு ஒரு ரீசன் இருக்கு


அத கண்டுபிடி கண்டுபிடி ஹே சூரா


டாக்டர் ப்ரூஸ் பேனர்


உன் கையில் ஸ்பேனர்


தோரோட  ஹேம்மர்


உன்னோட கையில நீ பிடி


டம் டம் நீ அடி


 


ஏ டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க


சிந்தசைஸர் துடிக்க


எதிர்காலம் படைக்க


தமிழ் சூரோ சூரோ வாராரோ...


அடமண்டியம் நெஞ்சம் தான் 


இனி யாருக்கு அஞ்சும்தான் 


தானோஸ் படை கெஞ்சும்தான்


சூரோ சூரோ சூப்பர் ஹீரோ (4)


 


எங்காச்சும் பிரச்சன வந்தால் ஓடுவியேயா


இப்போ உன் ஐவிரலத்தான் காட்டுறியோ


கதிரவன காம்னு மாத்து


மொரச்சவனெல்லாம் மீமுனு மாத்து


கிலிகிலிஸ்தான் மியூசிக்க ஏத்திக்கோ


புதுபுதுசா தீம நீ மாத்து


தடைகள் எல்லாம் கேமுனு மாத்து


இனிமேல் தான் தொடங்குது கணக்கும்


எனிமிகள் எல்லாம் மினி மீல் எனக்கு


ஏ டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க


சிந்தசைஸர் துடிக்க


எதிர்காலம் படைக்க


தமிழ் சூரோ சூரோ வாராரோ...(4)