அயலா அயலா

சிவகார்த்திகேயன் நடித்து ரவிகுமார் இயக்கியுள்ள படம் அயலான். ரகுல் ப்ரீத் சிங்,  யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே .ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் அயலான் படத்தின் முதல் பாடலான ’வேற லெவல் சகோ’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ’அயலா அயலா’ வெளியாகியுள்ளது. இந்தப்  பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

பாடல்வரிகள்

அயலா அயலா

அயலா நீ

சிக்கி பிக்கி பெட்டுக் குட்டி 

பிளானட் தாவியே வந்தான்

பாவம் இந்த ஏலியன்வாசி நம்மகிட்ட மாட்டிக்கிட்டான்

சேட்டர்னோட ரிங்க தாண்டி 

ஸ்டைலா பூமிக்கு வந்தான்

 நம்ம ஊரு ஸ்பீடு பிரேக்கர் தாண்டும்போது நட்டுகிட்டான்

ஊர சுத்திப் பார்த்தான்

வெப்பத்தில் டிரவுசர் வேர்த்தான்

இது சூரியனா பூமியான்னு டவுட் ஆகுறான்

பாப்புலேஷன் பார்த்தான்

எவ்வளவுன்னு எண்ணி சேர்த்தான்

அவன் மேத்ஸில் நம்பர் இல்ல

ஷாக் ஆகுறான்

இங்க டிராஃபிக்கில் ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா 

நின்னு பேட் வர்ட்ஸ நோட்ஸ் எடுத்தான்

அயலா நீ அயலா நீ

 

மனுஷ குட்டிய சட்டுன்னு பாத்தா

நீ டக்குனு ஒளிஞ்சுக்கனும்

உன் நெக்குல சங்கிலிய மாட்டி

வித்த காட்டிருவான் புரிஞ்சுக்கணும்

நீ கண்ண மூடி ஸ்கையை பாத்து 

உக்காந்தன்னா போயே போச்சு

ஏலியனார் கோவில் கட்டி

காசு போடும் ஊரு

இங்க யாருக்குமே ஃப்ரண்டே இல்ல 

கூட வரும் ஃபோன் தொல்லை

அக்கம் பக்கம் வீடு கூட

அது வேற பிளானட் பாரு

வரும்போது தல காட்டி

அப்பீட்டாகும் கரை வேட்டி

எல்லாரும் ஏலியன் தான் நீயே பெட்டரு

அயலா நீ

 

வேற மொழி ஹீரோயினோ

வேற்றுலக ஏலியனோ 

வந்தவரை வாழ வைப்போம் 

 நம்பு நில்லுப்பா

ஓட்டர் ஐடி இல்லாமலே

ஓட்டுக்கூட போடலாமே

எங்களில் நீ ஒருத்தன் தானப்பா

ட்விட்டரில் டிபி ஒன்னு போடலாம்

சோஷியல் மெசேஜ் சொல்லி ட்ரெண்ட் ஆகலாம்

என் வாழ்க்கை அழகாச்சு

உன்னால கலராச்சு

ஏய் சுட்டிப் பயலா நீ அயலா

ஊரில் எவ்வளவு பிளானட்ஸு

விண்ணைத்தாண்டி வந்து இங்க குதிச்ச நீயே

வேறு எந்த கிரகத்திலும் நம்ம தமிழைப் போல் 

மொழியே இல்லையாமே!

அயலா நீ அயலா நீ.