இயக்குனர் மிஷ்கின் உடன் இணையும் நடிகர் சிவகார்த்திகேயன்... புதிய படத்திற்கு குவியும் அப்டேட்!

இப்படத்தை தொடர்ந்து, “மண்டேலா” பட இயக்குனர் அஷ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “டான்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெஷல் ஆப்ஸ் 1.5: தி ஹிம்மத் ஸ்டோரி என்னும் வலைத்தொடரில் அறிமுகமான மரியா ரியாபோஷாப்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

Continues below advertisement

இப்படத்தை தொடர்ந்து, “மண்டேலா” பட இயக்குனர் அஷ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. “மாவீரன்” என்று தலைப்பு வைத்துள்ளதாகவும், கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது இவரின் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இந்நிலையில், இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்குமுன் இயக்குனர் மிஷ்கின் பேச்சுலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது பிசாசு-2, திரைப்படத்தை இயக்கி முடித்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைப்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. இதற்குமுன் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரிதாகப்பேசப்பட்டது.


காமெடி ஆன ரோலில் கூட சீரியசாக நடிப்பவர் மிஷ்கின், சில மாதங்களுக்கு முன் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் கூட டாக்டர் வேடத்தில் சீரியஸ் ஆகா நடித்து இருந்தார். சீரியஸ் ஆனா நேரத்தில் கூட காமெடி டைமிங்க்கு பேர் போனவர் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் எப்படி ஒன்றாக நடிப்பார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்து டாக்டர் திரைப்படத்தில் கூட இயக்குனர் எஸ். ஜே. சூர்யா உடன் இணைந்து நடித்து இருந்தார் சிவகார்த்திகேயன், அவர்களின் காமெடி டைமிங்ஸ் பெரிதாக பேசபட்டது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பிரின்ஸ் திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார், இதற்கு முன் இருவரும் இணைந்து "கனா", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படங்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் பல படங்களில் முக்கிய வேடத்தில் ஒரு நடிகர் இருப்பது வழக்கமாகி வருகிறது.


தற்போது தனது மூன்றாவது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, இவர் இந்திய முன்னால் கிரிக்கெட் கேப்டன் எம். எஸ். டோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோனி: தி அன்டோல்டு ஸ்டோரியில் டோனியின் மனைவி சாக்க்ஷி டோனியாக நடித்து பிரபலம் ஆனவர். தற்போது தனது நடிப்பில் வெளிவந்த “ஜக்ஜக் ஜீயோ” திரைப்படம் பாலிவுட்டில் மெகா ஹிட் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் நடந்துவருவதாக தகவல்கள். விரைவில் “மாவீரன்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola