நடிகர் விஜய்- அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இருவருக்கும் இடையே அவ்வளவாக பரஸ்பரம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் எழுந்தது. அப்படி, மூன்று நாட்களுக்கு முன்பு எஸ். ஏ. சந்திரசேகருக்கு 80-வது பிறந்தநாள் கொண்டாட்டம் திருக்கடையூர் கோயிலில் நடைபெற்றது.
எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார், எஸ். ஏ. சேகர். தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஆனால், இந்த கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என்பது பேசுப்பொருளானது.
எஸ்.ஏ. சந்திரசேகருக்கு தனது மகன் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் எண்ணம் இருக்கிறது. தற்போதுள்ள நிலையில், விஜய் அரசியலுக்கு வருவதுதான் நல்லது என்று அவர் நினைக்கிறார். ஆனால், விஜய்-க்கும் அரசியல் ஆசை இருந்தாலும் நிதானமாக இருக்கிறார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. விஜய் தன்பக்கம் உள்ள நியாத்திற்காக தந்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்.
தந்தை மகனுக்கு இடையில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவரும் நிலையில், தன்னுடைய பிறந்தாள் கொண்டாட்டத்தில் விஜய் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
“என் பிறந்தாள் கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்காததற்கு காரணம் அவருக்கு ஜூலை 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் திரைப்பட ஷூட்டிங் இருந்தததுதான்” என்று தெரிவித்துள்ளார். ஜூலை, 1 ஆம் தேதி அன்றே விஜய் ஹைத்ராபாத் சென்றுவிட்டார். இதனால்தான் தன் பிறந்தநாளுக்கு விஜய் வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது, திரைப்படங்கள் பெற்றோர்களை அன்புடனும், மரியாதையுடனும் என்று பேசும் விஜய் நிஜ வாழ்வில் பின்பற்றவில்லையே என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். தந்தையின் 80-வது பிறந்தாளுக்குக் கூட அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லையா? என்றும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
எனினும், ஒருவர் என்னதான், சினிமா பிரபலம் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் கருத்து சொல்ல உரிமை இல்லை. அவர்களும் நம்மைப் போல சாதாரண மனிதர்கள்தானே. அவர்களின் குடும்ப விஷயங்களில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்