பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி ஜோடி கோலிவுட் சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒரு கோடி.


தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் அறிந்த, உறவினர்களான இந்த ஜோடி 16 மே 2011 அன்று நிச்சயதார்த்தம் செய்து அதே ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் செய்து கொண்டனர். சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் தனது மனைவி வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்வதோடு, தனது நிதியையும் பார்த்துக்கொள்கிறார் என்றும், அவர் உதவி இல்லாமல் தனது தொழிலில் முழு கவனம் செலுத்த முடியாது என்றும் பகிர்ந்துள்ளார்.






நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஜூலை 12, 2021 அன்று தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்றனர். இந்த ஜோடி 2013-இல் மகள் ஆராதனாவுக்கு பெற்றோரானார்கள். சமீபத்தில், சிவா தனது மகனின் புகைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.






சிவகார்த்திகேயன் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2012 இல் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக  அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருடப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைக்காரன், நம்வீட்டுப் பிள்ளை போன்ற சிறந்த தமிழ்த் திரைப்படங்களை அவர் செய்துள்ளார். தமிழில் நகைச்சுவைப் படமான ரெமோவில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.






இந்நிலையில் டாக்டர், டான் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம்  தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் உருவாகவுள்ளது. முன்னதாக, இந்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.