அமரன்


சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அமரன். சாய் பல்லவி  நாயகியாக நடிக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி. வி .பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவில் இருந்து கடந்த  2010ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கையை வரலாற்றைத் தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.


அமரன் குறித்து ராஜ்குமார் பெரியசாமி 


தனது நண்பர் ஒருவர் தனக்கு ஃபோன் செய்து "India's Most fearless" என்ற புத்தகத்தை தன்னை படிக்கச் சொன்னதாகவும் மொத்தம் நான்கு பாகங்கள் வெளியாகியிருக்கும் இந்த வரிசையில்  ஒவ்வொரு புத்தகமும் 15 ஹீரோக்களுக்கு சமர்பிக்கப்பட்டு இருக்கும். அதில் போர்முனை, இந்திய பாதுகாப்புத்துறையில் இருப்பவர்களின் வீரதீர செயல்களை பதிவு பண்ணிய தகவல்கள் இருக்கும். இதில்  தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பற்றி  2 தகவல்கள் எழுதியிருப்பதாக சொன்னார். அதில் தான் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருந்ததாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.


பின்னர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனிடமும் அதன் பிறகு சிலரிடம் பேசி காஷ்மீரில் அவரின் 2 ஆபரேஷன்கள் பற்றி கேட்டறிந்தேன். முகுந்த் குடும்பத்தினரிடம் பேசியபோது வேறு வித தகவல்கள் கிடைத்தது. ஆனால் இவை எதுவும் திரைக்கதையாக வரவில்லை. இதை அனைத்தையும் பேப்பரில் எழுதி வைத்தேன். பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த மேஜர் முகுந்தின் மனைவியை சந்தித்தேன். அந்த சந்திப்பு 6,7 மணி நேரம் சென்றது. அப்போது தான் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு ஆன்மா உள்ளது தெரிந்தது. அப்படியாக அமரன் படத்தின் கதை உருவாக காரணம் அமைந்தது” என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். 


10 ஆம் ஆண்டு நினைவு தினம்






அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில் இன்று மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மேஜர் முகுந்த் மற்றும் அவருடம் களத்தில் வீர மரணமடைந்த விக்ரம் ஆகிய இருவருக்கும் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.