அமரன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது . மேஜர் முகுந்தனின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். தற்போது சாய் பல்லவி கதாபாத்திரத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழுவை வெளியிட்டுள்ளது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தவர் இந்து. இருவருக்கும் இடையில் மிக அழகான காதல் வாழ்க்கை இருந்துள்ளது. 






யார் இந்த இந்து ரெபெக்கா வர்கீஸ் 


இந்து சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது முகுந்தை சந்தித்தார். முகுந்த் தன்னிடம் காதலை வெளிப்படுத்திய பின் தனது பெற்றோர்களிடம் அதைப் பற்றி கூறியுள்ளார் இந்து. ஆனால் ஒரு ராணுவ வீரரை திருமணம் செய்துகொள்வது குறித்து அவரது பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். வெளியில் பார்க்க முரட்டு தனமான ஒரு நபராக இருந்தாலும் முகுந்த் மனதளவில் மிகவும் நகைச்சுவையான ஒரு மனிதனாக இருந்தது தனக்கு பிடித்திருந்ததாக இந்து தெரிவித்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேல் முகுந்தின் நேர்மையே தன்னை அதிகம் கவர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இருவரும் காதலித்த காலத்தில் இந்து கல்லூரி படித்துக் கொண்டிருக்க முகுந்த் தனது பரீட்சைக்கு தயார்செய்துகொண்டிருந்தார் . இதனால் இருவரால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாமல் போனது. வாரம் ஞாயிற்று கிழமை ஆனால் சென்னை ஆபிஸர் அகாடமிச் சென்று இந்து முகுந்திற்காக காத்திருப்பார். இதனால் இந்துவுக்கு அவரது நணபர்களுக்கும் இடையில் சண்டை கூட வந்திருக்கிறதாம். 


ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் இந்துவின் பெற்றோர்களை முகுந்த் ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. தனது வேலை காரணமாக முகுந்த் மற்றும் இந்துவும் வருடத்திற்கு ஒரு சில மாதங்களே சேர்ந்து இருக்க முடிந்தது. ஐந்து ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து இருந்த காலம் ஒரு வருடம் மட்டுமே என இந்து தெரிவித்துள்ளார் 


கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி மேஜர் முகுந்த் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார். இந்திய அரசு அவருக்கு அசோக சக்கிரா விருதினை வழங்கி கெளரவித்தது. முகுந்த் சார்பாக அவரது மனைவி இந்து இந்த  விருதினைப் பெற்றுக்கொண்டார்.  தனது கணவரின் இறப்பைத் தொடர்ந்து இந்து அவருக்காக கவிதை ஒன்றை எழுதினார்


There lived a man who loved me with all his heart
There lived a man who fathered my child
There lived a man who believed in integrity
There lived a man who loved his profession
There lived a man who never feigned to be a hero
There lived a man who was my soul
There lived a man with a heart full of generosity
There lived a man who revealed all to me
There lived a man who loved me with his life.

But .....now I wait.
for he is with god..
I know this for sure
One day I will meet him
I know this for sure
And he will give me that warm strong hug of his
I know this for sure
And I will not complain that I can't breath
I know this for sure
You can hug me..hug me all you want.

- Indhu Rebecca Varghese.