ஜன்னல் வழியாக தப்ப முயன்ற இளம் பெண்கள்
SPA சோதனையின் போது போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்து பெண் ஊழியர். ஜன்னல் வழியாக போலீசார் பெண்களை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஸ்பாவை திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தனிப்படை போலீசார் ஸ்பாவை சோதனை செய்ய சென்ற போது , ஸ்பாவில் வேலை பார்த்த 4 பெண்கள் போலீசாரை பார்த்து பயந்து இரண்டாம் தளத்தில் இருந்த பின்பக்க ஜன்னலில் மறைந்துள்ளனர்.
இதனை கண்ட போலீசார் ஜன்னல் வழியாக தப்பிக்க முயன்ற மூன்று பெண்களை மீட்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு பெண் மட்டும் கீழே குதித்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண்ணுக்கு இடும்பு, கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து எழும்பூர் போலீசார் சட்டவிரோதமாக ஸ்பாவை நடத்தியதாக வழக்குபதிவு செய்து அதில் பணியாற்றிய 5 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மசாஜ் சென்டரின் உரிமையாளர் அருள் மற்றும் மேனேஜர் அருள் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்பாவில் போலீசார் சோதனைக்கு சென்றதும், போலீசாருக்கு பயந்து இளம்பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க மறைந்திருக்கக்கூடிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக போலீசார் பயந்து ஒளிந்திருந்த பெண்களை மீட்கும் போது, ஒரு பெண் மட்டும் கீழே தப்பித்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக விழுந்து படுகாயமடைந்தது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ காட்சிகளை வைத்து உயரதிகாரிகள் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகின்றனர்.