அமரன் 


நடிகர் சிவகார்த்திகேயனின் கரியரில் திருப்புமுனையாக அமரன் படம் அமைந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய இப்படம் இன்றுவரை மக்களால் பேசப்பட்டு வருகிறது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையை எந்த வித மிகைப்படுத்தலும் இல்லாமல் திரையில் கொண்டு வருவதில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார். மேலும் மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயனும் இந்துவாக சாய் பல்லவியும் மக்களின் அன்பை பெற்றுள்ளார்கள். 


உலகளவில் அமரன் திரைப்படம் ரூ 300 கோடி வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்கைத் தொடர்ந்து ஓடிடியிலும் அமரன் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் , இயக்குநர் , நடிகர் , இசையமைப்பாளர் என அனைவரும் பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில் இப்படத்தின் பின்னணியில் இருந்து பங்காற்றிய கெளதம் கார்த்திக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.


அமரன் வில்லனுக்கு டப்பிங் பேசிய கெளதம் கார்த்தி 


அமரன் படத்தில் வில்லன் ஆசிஃப் வானியாக ரோமன் ஷா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் கெளதம் கார்த்திக் டப்பிங் பேசியுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது . இந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச கேட்ட உடனே கெளதம் கார்த்தி ஒப்புக் கொண்டதற்காக ராஜ்குமார் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். 






படத்தில் மற்றொரு வில்லனாக வரும் அல்தாஃப் வானி கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹரிஷ் உத்தமன் டப்பிங் பேசியுள்ளார்


புறநாநூறு


சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 மற்றும் சுதா கொங்காரா இயக்கும் புறநாநூறு படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகும் புறநாநூறு படத்தில் ஜெயம் ரவி , அதர்வா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. சுமார் ரூ 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது