இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பென் காபா மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா 260 ரன்கள் :
இந்திய அணி தனது முதலாவது முதலாவது இன்னிங்ஸ்சில் 260 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், ராகுல், ஜடேஜா, ஆகாஷ் தீப், பும்ரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஃபலோ ஆனையும் தவிர்த்து 260 ரன்களுக்கு ஆட்டன்மிழந்தது.
கொண்டாடிய சிறுவன்:
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை சிதைத்தனர். இந்தியாவுக்கு தலைவலியாக இருந்த ஹெட்டை வெறும் 17 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் சிராஜ் . இதைத் தொடர்ந்து, டீம் இந்தியாவின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர், அப்போது மைதானத்தில் இருந்த சிறுவன் ஒருவன் கடந்த போட்டியில் சிராஜ் , டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது செய்த அதே கொண்டாட்டத்தை செய்து காட்டினார், இதனால் அந்த சிறுவனின் கொண்டாட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மன்னிச்சிகோங்க ஹெட்:
இதற்கிடையில், ஐந்தாவது நாளின் தொடக்கத்தில் ஒரு வேடிக்கையான தருணமும் இருந்தது, மைதானத்தின் நடுவே ஆகாஷ் தீப்புக்கும், டிராவிஸ் ஹெட்க்கும் இடையே நடந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, வீடியோ வைரலாகி வருகிறது. நாதன் லயன் வீசிய இரண்டாவது ஓவரில் ஆகாஷ் தீப்பின் பேட்களில் பந்து சிக்கியது. டிராவிஸ் ஹெட், ஷார்ட் லெக்கை நோக்கி நின்று, பந்தை எடுக்க அவரை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆகாஷ்தீப் பேடில் இருந்து பந்தை எடுத்து தனது கைகளில் இருந்து கீழே தரையில் வீசினார். டிராவிஸ் ஹெட் பந்து கீழே விழுந்த பிறகு கோபமாக காணப்பட்டார். ஆனால், ஆகாஷ்தீப் வேண்டுமென்றே பந்து வீசவில்லை. ஹெட்டைப் பார்த்து sorry-sorry என்றார் இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிராவில் முடிந்த டெஸ்ட்:
இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் குறுக்கே வந்த கவுசிக் வந்த மாதிரி மழை குறுக்கிட்டது, அதன் பிறகு போட்டியை தொடர முடியாமல் போனதால் போட்டி டிராவில் முடிந்தது.