ரவியின் திருமண விஷயம் தொடர்பாக அண்ணாமலையின் நண்பர் பரசுவிடம் பேசிவிட்டு வந்த முத்து பரசு பேசியதை இமிட்டேட் செய்து  காட்டுகிறார். முத்து பேசியதாவது: “அண்ணாமலை இருக்காரே அவரு தங்கமான மனுஷன். அவரு வீட்டுக்கு என் பொண்ண மருமகளா அனுப்புறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனும். உன் அப்பாவுக்காக நான் இந்த சம்பந்தத்தை ஏத்துக்கல. ஆனா உன் அம்மாவ நெனச்சா எனக்கு பயமா இருக்குபா.


அவங்க இருக்குற வீட்டுக்கு என் பொண்ண நான் கொடுக்க மாட்டேன் பா. நான் ஏழை தான் ஆனா என்கிட்ட இருக்குறத வச்சி என் பொண்ண படிக்க வச்சி ஆளாக்கிட்டேன். சாதாரண குடும்பமா இருந்தாலும் என் பொண்ணு நிம்மதியா வாழனும். உங்க அம்மா இருக்குற வீட்டுக்கு அவளை அனுப்ப எனக்கு மனசு கேட்கலபா.


நீங்க எல்லாம் நல்ல புள்ளைங்க. உன் பொண்டாட்டி சொக்கத் தங்கம். அவளையே உங்க அம்மா படாத பாடுபடுத்துறாங்க”.  என்று சொன்னதாகக் கூறுகிறார். மேலும் பரசு தன் பெண்ணை தர முடியாது என்று கூறியதாக முத்து கூறுகிறார். 


“ஒன்னும் இல்லாத ஆளு இந்த அளவுக்கு பேசுறாரா?” என்கிறார் விஜாயா. “நான் இருக்குற வீட்டுக்கு அவரு பொண்ணு குடுக்க மாட்டாரா அப்படி என்ன நான் இவள படுத்திட்டேன். சொல்லுடி நான் உன்னை படுத்துறேனா” என குரலை உயர்த்தி பேசுகிறார் விஜயா. ரோகினி, ”ஆண்டி ஏன் அந்த அங்கிள் இப்டி பேசி இருக்காரு? நான் உங்க மருமக தானே என்னை நீங்க நல்லா தானே பாத்துக்குறீங்க” என்கிறார்.


“பரசு பொண்ணை நான் உனக்கு தான் கட்டி வைக்கலாம்னு நெனச்சிட்டு இருந்தேன்” என்று அண்ணாமலை கூறுகிறார். உடனே முத்து சிரித்துக் கொண்டே ‘அப்டியாபா’ என்கிறார். மீனா முறைப்பதை பார்த்ததும், “எந்த பொண்ணா இருந்தாலும் மீனா மாதிரி மீன் குழம்பு வைக்க முடியுமாபா..” என்று கூறி சமாளிக்கிறார். 


முத்து, “அம்மா ஓவரா பேசுனாங்க இல்ல, அதனால தான் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு வந்து காட்டினேன்” என்கிறார். உடனே விஜயா ”பெரிய இளவரசியை பெத்து வச்சிருக்காரு, அதுக்கெல்லாம் கல்யாணமே நடக்காது பாரு” என்கிறார். அண்ணாமலை இப்படியெல்லாம் பேசாத என்கிறார்.


முத்து, “எனக்கு கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம்” என்று சொல்லி விட்டு வெளியே செல்கிறார். உடனே விஜயா, “இனிமே நீங்க ரவிக்கு பொண்ணெல்லாம் பார்க்க வேண்டாம் நான் பார்த்துக்குறேன்” என்கிறார்.


முத்து, மீனாவிடம் “நான் ஸ்டேண்டுக்கு கிளம்புறேன்” என்கிறார். ஆனால் மீனா முத்துவின் மீது கோபமாக இருக்கிறார். முத்துவிடம் ஏட்டிக்கு போட்டியா பேசிகிறார். மீனாவிடம் “மீன்குழம்பு வேண்டும்” என்கிறார் முத்து. அதற்கு மீனா முத்துவிடம் சண்டை போடுகிறார். போங்க இங்க இருந்து என்கிறார். “என்னை தள்ளு” என்கிறார். தள்ளும் போது முத்து மீனாவை கட்டிப்பிடித்து கொள்கிறார். உடனே முத்து “தெரியாம சொல்லிட்டேன், நீ சமைக்க மட்டும் இல்ல எனக்கு பொண்டாட்டியாவும் இருக்க” என்கிறார். 


மனோஜ் வேலைக்கு கிளம்புகிறார். அப்போது முத்து, “அப்பா இவன் இப்டி சின்சியரா லஞ்ச் பேக் எல்லாம் எடுத்துட்டு போறத பார்த்தா அவன் வேலைக்கு போறா மாதிரி தெரியலையே” என்கிறார். உடனே ரோகிணி மனோஜூக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். அண்ணாமலை சமாதானம் செய்து வைக்கிறார். 


விஜயா, “ரவிக்கு பொண்ணு பார்க்கணும் இல்ல” என்கிறார். “நாளைக்கு ரவியை பார்ப்பதற்கு அவங்க இங்க வராங்க. அவங்க வரும் போது இவன பிரச்சனை பன்ன வேண்டாம்னு சொல்லுங்க” என முத்துவைப் பார்த்து கூறுகிறார்.


முத்து, அண்ணாமலையிடம் “அப்பா, என்னப்பா இவங்க திடீர்னு  யாரோ வாராங்கனு சொல்றாங்க” என்கிறார். அதற்கு அண்ணாமலை “நம்ம சொன்ன சம்பந்தம் தான் ஒத்து வரல. அவ யார சொல்றானு பார்ப்போம்” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.