ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற அக்டோபர் 5 ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இத்தனை ஆண்டு கால ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் எத்தனையா சாதனைகள், வேதனைகள் இருந்தாலும் தற்போது இருக்கும் ஆக்டிவ் ப்ளேயர்ஸ்களில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார் என்றார் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், இதுதான் உண்மை.
வருகின்ற உலகக் கோப்பை போட்டிக்கு வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷகி அல் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆக்டிவ் ப்ளேயர்கள் பட்டியலில் உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ஷகிப் அல் ஹாசன் முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் இவர் இதுவரை 29 இன்னிங்ஸில் 45.84 சராசரியில் 2 சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் உள்பட 1146 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இதுவரை 26 இன்னிங்ஸ்களில் 46.82 சராசரியில் 2 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் உள்பட 1030 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உள்ளார். வார்னர் ஒருநாள் உலகக் கோப்பையில் 18 இன்னிங்ஸ்களில் 62 சராசரியில் 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் 992 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். ரோஹித் சர்மா 17 இன்னிங்ஸ்களில் 65.2 சராசரியுடன் 978 ரன்கள் எடுத்துள்ளார், அதில் அவர் 6 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் அடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 22 இன்னிங்சில் 56.94 சராசரியுடன் 911 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும், வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹிம் 28 இன்னிங்ஸில் 877 ரன்களுடன் 38.13 சராசரியிலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 834 ரன்களுடன் 6வது இடத்திலும் உள்ளனர். 20 இன்னிங்ஸ்களில் 46.33 சராசரியில் ஏழாவது இடத்தில் உள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் (ஆக்டிவ் பிளேயர்கள்)
- ஷகிப் அல் ஹசன்- 1146
- விராட் கோலி - 1030
- டேவிட் வார்னர்- 992
- ரோஹித் சர்மா - 978
- கேன் வில்லியம்சன்- 911
- முஷ்பிகுர் ரஹீம்- 877
- ஸ்டீவ் ஸ்மித்- 834
ஒட்டுமொத்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை பார்த்தால் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் உள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்:
"கிரிக்கெட்டின் கடவுள்" என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1992-2011 வரை நடந்த உலகக் கோப்பையில் 44 இன்னிங்ஸ்களில் விளையாடி 2278 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 152 ரன்கள்.
ரிக்கி பாண்டிங்:
ஐசிசி உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் ரிக்கி பாண்டிங் ஆவார். பாண்டிங் இதுவரை 42 இன்னிங்ஸ்கள் விளையாடி 1743 ரன்கள் எடுத்தார், அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இவர் ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமார் சங்கக்கார:
இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 33 இன்னிங்ஸ் விளையாடி 1532 ரன்கள் குவித்துள்ளார். 124 ரன்கள் இவரது அதிகபட்ச ஸ்கோர்.
பிரையன் லாரா:
ஐசிசி உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் பிரையன் லாரா 4வது இடத்தில் உள்ளார். இவர், லாரா 33 இன்னிங்ஸில் 116 ரன்களுடன் 1225 ரன்கள் எடுத்தார்.