‘சிறகடிக்க ஆசை’ இன்றைய எபிசோடில் விஜயா வீட்டுக்குள் நுழைந்த உடனேயே அவரின் கணவரிடம் "நீங்க முத்துவை கூப்பிடுங்க, நான் மனோஜை கூப்பிடுறேன் பேசணும்" என்றார். கூப்பிட்டதும் மனோஜ், ரோகிணி (கல்யாணி) முத்து, மீனா ஆகியோர் ஹாலில் ஒன்று கூடுகின்றனர்.
”இந்த வீட்ல என் அளவுக்கு யாருக்கும் பொருப்பில்லை, இந்த வீட்டில் வர வர எனக்கு மரியாதை குறஞ்சிக்கிட்டே போகுது, என் மரியாதை முழுசா குறையுறதுக்குள்ள ரவிக்கு கல்யாணத்தை பன்னிடலாம்னு நினைக்குறேன்”என்கிறார் விஜயா.
மீனாவிடம் விஜயா வம்பிழுகிறார். அண்ணாமலை, “ரவி கல்யாணத்தை பத்தி மட்டும் பேசு” என்கிறார். ”ரவி ஹாண்ட்சமா இருக்கான், சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவான். அவன கொத்திக்கிட்டு போக சில கழுகுங்க சுத்திக்கிட்டு இருக்குங்க. அதனால ரவிக்கு நானே பொண்ணு பார்க்கறேன். யாரும் எங்கேயும் தேட வேண்டாம். திரும்பவும் இறக்கப்படுறேன்னு எங்கேயும் போயி பொண்ணும் கொண்டு வர வேண்டாம்” என்கிறார் விஜயா.
உடனே ரோகினி, ”மீனா முத்து மேரேஜ் கூட அப்படி தானே நடந்தது” என்கிறார். உடனே முத்து, ”நீ என்ன மீனாவுக்கும் முத்துவுக்கும் இப்டி தான் கல்யாணம் நடந்துச்சுனு சைட்ல ஹார்ன் அடிக்குற. யாருக்கு எப்டி கல்யாணம் நடந்தா உனக்கென்ன? உன் வேலையை மட்டும் பாருமா” என்கிறார்.
அண்ணாமலை, ”இப்போ நானே ரவிக்கு ஒரு பொண்ணு பார்த்து தான் வச்சிருக்கேன்” என்கிறார். அதற்கு விஜயா, ”அச்சச்சோ நீங்க பார்த்து வச்சிருக்கிங்களா.. யாரு..” என்கிறார். அவர், ”எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணு தான். நம்ம பரசுவோடு பொண்ணு” என்கிறார். விஜயா, ஹான் அந்த பொண்ணா என பெருமூச்சு விடுகிறார். அண்ணாமலை “ரவியிடம் பேசி முடிவெடுக்கலாம்” என்கிறார்.
உடனே “பொண்ணு அழகா இருப்பாளா..” என விஜயா கேட்கிறார். அதற்கு மீனா “மனப் பொருத்தம் இருந்தா போதும்” என்கிறார். “அப்பா நீ பரசு மாமா பொண்ணையே பேசி முடிப்பா” என்கிறார் முத்து. விஜயா, ”பெரிய இடத்து பொண்ணா இருந்தா கொஞ்சமாவது நம்ம பேரை காப்பாத்துவாங்க. இப்போ ரோகிணியைப் பாருங்க பார்லருக்கு என் பேரை வச்சிருக்கா” என்கிறார். “ஏன் மலேசியாவுல இருந்து மனோஜ்க்கு நான் ஒரு பொண்ண கொண்டு வந்தேன் இல்ல.. நல்ல பொண்ணு தானே?” என்கிறார் விஜாயா.
அண்ணாமலை, ”விஜயா நீ எங்கேயும் பொண்ணு பார்க்க வேண்டாம். பரசு பொண்ண மட்டும் பார்போம்” என்கிறார். முத்துவை அவர்கள் வீட்டிற்கு சென்று பேசி விட்டு வர சொல்கிறார். என்னவோ பண்ணி தொலைங்க என்று கூறிவிட்டு விஜயா எழுந்து சென்று விடுகிறார். மனோஜ் ஒரு பார்க்கில் படுத்திருக்கிறார். அங்கு அவர் ரெகுலராக சந்திக்கும் நண்பர்களிடம் பேசுகிறார்.
ரவி வீட்டில் இருக்கிறார். மீனா, “என்ன ரவி கெளம்பிட்டிங்களா? சீக்கிரமா சொந்தமா ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சிடுங்க” என்கிறார். வீட்டில் பொண்ணு பார்த்த விஷயத்தை மீனா ரவியிடம் கூறுகுறார். இது குறித்து ரவி தனது அப்பாவிடம் கேட்கிறார். அதற்கு அவரும் “மீனா கூறியது உண்மை தான்” எனக் கூறுகிறார். ரவி, ”அப்பா எனக்கு நிறைய ஆம்பிஷன் இருக்கு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கனும்” என்கிறார்.
விஜயா ரவியிடம், ”உங்க அப்பா எந்த மாதிரி எடத்துல எல்லாம் பொண்ணு பார்க்குறாரு பார்த்தியா? ரயில்வேயில இவருக்கு அசிஸ்டண்ட்டா இருக்குறவரு பொண்ணையே உன் தலையில கட்ட பார்க்குறாரு” என்கிறார்.
“நல்ல மனசு இருக்குறவங்க சுத்தி இருந்தாங்கனா அது தான் வசதியான வாழ்க்கைனு உங்க அம்மாவுக்கு புரியல” என்கிறார் அண்ணாமலை. முத்து பரசு வீட்டுக்குச் சென்று பேசி விட்டு வருகிறார். உடனே பரசு என்ன சொன்னார் என்பதை முத்து அவர் அப்பா முன் நடித்துக் காட்ட தயாராகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விட்டது.