ஷ்ரேயா கோஷல்
பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபல பாடகி ஷ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்ட அறிவிப்பில் " பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் என்னுடைய எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை மீட்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. என் அக்கவுண்டிற்குள் சென்று அதை டிலீட் செய்யக்கூட முடியவில்லை. தயவு செய்து என் கணக்கில் வெறும் எந்த ஒரு லிங்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். அவை எல்லாம் பணம் பறிப்பவை. " என தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதம மந்திரி மோடி கலந்துகொண்ட நிகழ்வில் ஷ்ரேயா கோஷல் கலந்துகொண்டு பேசினார். பிரதமருக்கு ஆதரவாக பேசியதால் பலர் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து இருந்தார்கள்.
பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் ஹேக் செய்யப்படுவது நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகை த்ரிஷாவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்தில் ஸ்வரா பாஸ்கரின் கணக்கு கடந்த மாதம் ஹேக் ஆனதாக தெரிவித்தார்.