இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி 2 ஆம் பாகத்தை எடுப்பதில் இயக்குநர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சில வருடங்களாக வடிவேலுவால் புதிய படங்களில் நடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு தடை நீக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வடிவேலும் மீண்டும் படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். முதற்கட்டமாக, சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் வடிவேலும் நடிக்க இருக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் ‘என்ஜாயி என்ஜாமி’ புகழ் தீயும், பிக்பாஸ் சீசன் 5 -யில் போட்டியாளராக களம் இறங்கி பின்னர் வெளியேற்றப்பட்ட மதுமிதாவும் நடிகர் வடிவேலு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடகி தீயின் தோழி பிக்பாஸ் மதுமிதா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சந்தோஷ் நாரயணன் குடும்பத்தோடு நடிகர் வடிவேலுவை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்