நடிகை ஸ்ரீதேவி, போனி கபூரின் மகளும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவருமான ஜான்வி கபூர் தான் எதிர்க்கொள்ளும் டிரால்ஸ் மற்றும்  நெகட்டிவ் கமெண்டுகளை எவ்வாறு எதிர்கொள்வேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். நாயகிகள் என்றாலே விமர்சனங்களையும் கேலிகளையும்  கடந்துதான் வர வேண்டும். அதில் வளர்ந்து வரும் பிரபலங்கள் , முன்னணி நட்சத்திரங்கள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. அதில் ஜான்வி மட்டும் என்ன விதிவிலக்கா. சமீபத்தில் கூட தந்தை தயாரிக்கும் திரைப்படமான வலிமை குறித்து இன்ஸ்டாகிராமின் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது வலிமை என்னும் டைட்டிலில் எழுத்துப்பிழை இருந்ததாக கூறி நெட்டிசன்கள் ஜான்வியை சரமாரியாக கேலி செய்தனர்.


அதுமட்டுமல்ல அவர் உடற்பயிற்சி செய்ய செல்லும் போது உடுத்தும் ஆடைகளும் பாலிவுட் ரசிகர்களால் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் படி விமர்சிக்கப்பட்டது.






இந்நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய நேர்காணலில் இது போன்ற ட்ரோல்ஸ் மற்றும் கமெண்டுகளை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ” ஆடியன்ஸ் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு முக்கியமாக தோன்றுகிறது. நான் அதற்கு எப்போதுமே மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். நான் செய்வதில் என்ன  குறை இருக்கிறது, நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் மூலம் கணக்கிடுகிறேன்.  அந்த முயற்சியை செய்ய சமூக ஊடகங்கள்  ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதில் எப்போதும் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டும் இருக்கிறது. பலர் சமூக ஊடகங்களில் இருந்தாலும், அது இன்னும் பெரும்பான்மையான மக்களின் குரலாக இல்லை என்பதையும் ஒருவர் அடையாளம் காண வேண்டும். பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்குறார்களோ அதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் . நிறைய ரகம் இருக்கிறது “என்றார்.






மேலும் “நான் விமர்சனத்தை ஏற்க இப்போது மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும் தயாராகிவிட்டேன். நான் மட்டுமல்ல எனது குடும்பமும் நீண்ட காலமாக விமர்சனங்களை ஏற்க பழகிவிட்டோம் .. உங்களால் என்ன முடியுமோ அதை முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான்“ என தெரிவித்துள்ளார்.