ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் முதல் மோகன்லால் நடித்த மலைகோட்டை வாலிபன் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இந்த வாரம் அதாவது நாளை பிப்.23 ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களின் லிஸ்ட்டைப் பார்க்கலாம்.


சிங்கப்பூர் சலூன்




கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon). வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், அமேசான் பிரைமில் நாளை பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


மலைக்கோட்டை வாலிபன்




மலையாள சினிமாவில் பெரும் பொருட்செலவில், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ கடந்த ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹரீஷ் பரேடி, தானிஷ் சைத், சோனாலி குல்கரனி, கதா நந்தி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஷாந்த் பிள்ளை இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலைக்கோட்டை வாலிபன் பிப்ரவரி 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.


போச்சர் ( Poacher)




2019ஆம் ஆண்டு வெளியான ' டெல்லி க்ரைம்' தொடரை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரிச்சி மேத்தா. தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு அவர் இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் 'போச்சர்'.  நிமிஷா சஜயன், ரோஷன் மேத்யூ உள்ளிட்டவர்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளார்கள். இந்தியக் காடுகளில் சட்டவிரோதமாக நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தத் தொடர் பிப்ரவரி 23ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.


மற்ற படங்கள்


இவை தவிர்த்து பிரியாமணி நடித்துக்கும் பம கலாபம் 2 ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. Saw x , Can i tell you a secret , Avatar : The last Airbender, Through My Window ஆகிய படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன.