நடிகை அஞ்சு
உதிரிப்பூக்கள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சு. குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 20க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். பொல்லாதவன், உல்லாச பறவைகள், நீயும் நானும், வீராப்பு, பொய் சாட்சி, இந்திர விழா என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு தெங்கு நடிகர், டைகர் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முத்து' படத்தில் எஸ்பியாக கதாபாத்திரத்தில் மீனாவுக்கு மாமனாக நடித்திருப்பார். மேலும் காயத்ரி, அன்புக்கு நான் அடிமை, அண்ணாமலை, பாண்டியன், ரோஜாவை கிள்ளாதே என்று பல படங்களில் நடித்துளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை
19 வயதில், அஞ்சு ஷூட்டிங் ஒன்றில் டைகர் பிரபாகரனை பார்க்க நேர்ந்தது. அவர் காட்டிய அன்புக்கும் அக்கரைக்கு சில வாரங்களிலேயே அடிமையானார். டீன் ஏஜ் வயசு. பெற்றோர் முதல் நலன் விரும்பிகள் வரை அவர் வேண்டவே வேண்டாம் என கூறியும் அஞ்சு, ஓடி போய் டைகரை திருமணம் செய்தார். திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின்னரே டைகரின் உண்மையான வயது, தன்னுடைய அப்பாவை விட அதிகம் என்பது அஞ்சுவுக்கு தெரிய வந்தது.
காதலுக்கு வயசு முக்கியம் இல்லை என, அதை அஞ்சு பெரிதாக கண்டுகொள்ள வில்லை என்றாலும்... ஏற்கனவே அவருக்கு 3 திருமணம் ஆகி, தன்னுடைய வயதில் ஒரு மகன் இருக்கும் தகவலும் தெரிய வர அதிர்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வந்த நிலையில், இனி இவருடன் வாழவே வேண்டாம் என முடிவு செய்து 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவரிடம் இருந்து பிரிந்து வந்துள்ளார்.
சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை அஞ்சு
அதன் பின்னர் டைகர் சிலமுறை அஞ்சுவை கூப்பிட்ட நிலையில் அவர் தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்தார். தற்போது அஞ்சுவுக்கு ஒரு மகன் உள்ளார். 19 வயதிலேயே தன்னுடைய வாழ்க்கையை தொலைத்த அஞ்சு, மகனுக்காகவே முழுமையாக வாழ துவங்கி விட்டார். குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடியதால், சில படங்களில் குணசித்ர வேடத்தில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடரில் நடித்து வருகிறார்.