இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில், ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரீமியர் காட்சிகள் இன்றிரவு 9 மணிக்கு மேல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. 


புஷ்பா 2 விமர்சனம் :


பிரபல சினிமா விமர்சகரும் வெளிநாட்டு தணிக்கை வாரிய குழுவை சேர்ந்தவருமான உமைர் சந்து புஷ்பா 2 திரைப்படத்திற்கு தனது முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புஷ்பா 2 படத்தின் நீளம் மூன்று மணி நேரம் ஓடினாலும் ஒரு இடத்தில் கூட போரடிக்கவில்லை. அல்லு தனது கேரியரின் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் அல்லு அர்ஜூன் மிரட்டி எடுத்துள்ளார், நிச்சயம் இந்த படத்திற்காக அவருக்கு நிச்சயம் மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும் என்றும், படத்தில் இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் நிச்சயம் மிரட்டலாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.






அதே போல ராஷ்மிகா மந்தானவும், ஃபக்த் ஃபாசிலும் தங்களது சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜூனுக்கும் இடையேயான ரொமன்ஸ் காட்சிகள் பைசா வசூலாக இருக்கும் என்றும் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும், புஷ்பா 3-க்கு கொடுத்த சர்ப்ரைஸ் அருமை, படத்தை மக்கள் மீண்டும் மீண்டும் வந்து திரையரங்களில் வந்து பார்ப்பார்கள் என்று உமைர் சந்து குறிப்பிட்டுள்ளார்.






இதையும் படிங்க: Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?


முன்பதிவில் சாதனை:


புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் 12000 திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவில் மட்டும் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும், படத்தின் முதல் நாள் வசூல் 300 கோடி வரை இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அல்லு அர்ஜூனின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா 2 இருக்கும் என்று சினிமா வட்டராங்களில் பேசப்பட்டு வருகிறது.