நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ள 48வது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமா ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்படும் நடிகர் சிலம்பரசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவரின் கம்பேக் படமாக 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு அமைந்தது. தொடர்ந்து மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியானதால் நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். 


இதனிடையே அனைவரின் எதிர்பாப்பும் சிம்புவின் 48வது படத்தை நோக்கி உள்ளது. காரணம் இந்த படத்தை  நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு  கடந்த மார்ச் 10 ஆம் தேதி வெளியானது. அப்போது இப்படம் குறித்த அறிவிப்பை “கனவுகள் நிச்சயம் நனவாகும்” என்ற கேப்ஷனுடன் சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.


கமல் - சிம்பு கூட்டணி திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் சிம்புவின் சினிமா கேரியல் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் குறித்த பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது ஹீரோயினாக நடிக்க வைக்க தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, திஷா பதானி ஆகியோருடன்  பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சிம்பு இரட்டை வேடத்தில்  நடிப்பதாகவும் சொல்லப்பட்டது.


அதேசமயம் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, ‘இப்படத்தில் இதுவரை யாரும் பார்க்காத சிம்புவின் மறுபக்கம் வெளிப்படும் என்றும், இந்த படம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு வரலாற்று படமாக இருக்கும்’ என்றும் தெரிவித்திருந்தார். சிம்புவும் நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இப்படியான நிலையில் இப்படத்திற்காக சிம்பு தாய்லாந்தில் தற்காற்பு கலை கற்றுக் கொண்டுள்ளார். 


லண்டனில் தீவிர ஒர்க் அவுட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சமீபத்தில் இந்த படத்துக்கான முன்னோட்ட டெஸ்ட் ஷூட்  நடந்து முடிந்துள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நவம்பரில் ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதற்கிடையில் லண்டனில் எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இது சிம்புவின் 48வது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: National Daughters Day: ’ஒரு தெய்வம் தந்த பூவே’ .. இன்று தேசிய மகள்கள் தினம்.. டாப் 10 மகள் பாடல்கள் இதோ..!