பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிலம்பரசனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரான சிலம்பரசனின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தபப்டத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். டைம் லூப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ‘சில்லுனு ஒரு காதல்’ படப்புகழ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக முடிவடைந்த நிலையில், அதன் டப்பிங் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்தப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த நிலையில் தற்போது அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் முன்னணி நடிகர்களான, ஷாருக்கான், சல்மான்கானை வைத்து படம் இயக்கப்போவதாக செய்தி வெளியான நிலையில், அதில் அமீர்கானை சிறப்புத்தோற்றத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்டது. ஒரு வேளை இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிப்பாரா இல்லை, சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறாரா? என்பது வரும் காலத்தில் தெரியும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்