தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது. இதைத் தொடர்ந்து தற்போது சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்டார். அவருடன் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் தாயாரும் கலந்துகொண்டனர். அப்போது சிம்பு டாக்டர் பட்டம் வாங்கும்போது டி.ராஜேந்தர் மேடையிலேயே கண் கலங்கினார்.
இந்நிலையில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பிறகு பேசிய நடிகர் சிம்பு, “முதலில் என்னுடன் சேர்ந்து இங்கு பட்டம் வாங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த டாக்டர் பட்டம் என்னுடையது என்று நான் கூறமாட்டேன். நான் டாக்டர் பட்டம் பெற முக்கிய காரணம் என்னுடைய தாய் மற்றும் தந்தை தான். ஏனென்றால் என்னை 9 மாத குழந்தையாக இருந்தப் போது நடிக்க வைத்தவர்கள் அவர்கள் தான்.
ஆகவே அவர்களுக்கு எனது முதல் நன்றி. அத்துடன் எனக்கு இப்படி ஒரு தாய்-தந்தையரை வழங்கிய இறைவனுக்கு என்னுடைய நன்றியை எப்படி கூறுவது என்று தெரியவில்லை. எல்லா குழந்தைகளுக்கும் இப்படி ஒரு தாய் தந்தையர் கிடைத்துவிட்டால் அது சிறப்பாக அமைந்துவிடும். மேலும் நான் இந்த டாக்டர் பட்டத்தை பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” எனக் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வாலை நடிகர் சிம்பு தற்போது காதலித்து வருவதாக தகவல் வெளியானது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்தே காதலித்து வருகிறார்களாம். இரண்டு வருடங்களாக ஸ்ட்ராங்காக செல்லும் இவர்கள் காதல் தற்போது லிவ்வின் ரிலேஷன்ஷிப் வரை சென்றிருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் எஸ்டிஆர் ! அதகளம் பண்ணும் ரசிகர்கள்..!