Simbu Doctorate:கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் எஸ்டிஆர் ! அதகளம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகர் சிம்புவிற்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது. இதைத் தொடர்ந்து தற்போது சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில்  உருவாகி வரும்  'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். இதில் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

Continues below advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்டார். 

டாக்டர் பட்டம் வாங்கியுள்ள சிம்புவிற்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் லைக்ஸ்குளை தெரிக்கவிட்டு வருகின்றனர். மேலும் திரையுலகினரும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

முன்னதாக இந்த விருது தொடர்பாக  வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், “நடிகர் சிலம்பரசனுக்கு கௌர வ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களைக் கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்த வகையில் தன்னுடைய ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன்.

விரைவில் அவருக்கு 39 வயது முடிவடைய உள்ளது. ஒருவரின் வயதும், அவரின் தொழிலும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு அம்சத்தை பெற்றவர் தான் நம் நடிகர் சிலம்பரசன். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வருகிறார். ஆகவே அவரின் சாதனையைக் கௌரவிப்பதன் நோக்கமாக  இந்த கௌரவ டாக்டர் பட்டம்  என்கிற அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதை எங்களுடைய  வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக கூடுதல் மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வாலை நடிகர் சிம்பு தற்போது காதலித்து வருவதாக தகவல் வெளியானது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்ததிலிருந்தே காதலித்து வருகிறார்களாம். இரண்டு வருடங்களாக ஸ்ட்ராங்காக செல்லும் இவர்கள் காதல் தற்போது லிவ்வின் ரிலேஷன்ஷிப் வரை சென்றிருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: ‛ஆன் லைனில் லேப்டாப் வாங்கி... விடிய விடிய விமானத்தில் கம்போசிங்...’ விமானிகளை அலற வைத்த ஹாரிஸ் ஜெயராஜ்!

Continues below advertisement
Sponsored Links by Taboola