புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் , புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22 ஆம் தேதி ‘ரோஸ் டே’ பின்பற்றப்படுகிறது. நேற்று சென்னை , தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்துக்கொண்டார். அப்போது அங்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பேசிய சிம்பு , அவர்களுடன் இணைந்து ‘ ஐயம் அ லிட்டில் ஸ்டார், ஆவேனா சூப்பர் ஸ்டார் ‘ என்னும் தனது சிறு வயது பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடனமாடி முடித்த பின்னர் குழந்தைகளுடன் பேசிய சிம்பு. நீங்கள் அனைவரும்தான் எங்களுக்கு முன்மாதிரி, எப்போதுமே நேர்மறை எண்ணத்துடனே இருங்கள். அதுவே உங்களை குணப்படுத்தும். நீங்கள்தான் உண்மையில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் குழந்தைகள் தன்னை பார்க்க ஆசைப்பட்டதால்தான் நான் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தெரிவித்த சிம்பு , புற்றுநோய் வருவதற்கான காரணம் புகையிலை மற்றும் புகைப்பிடிப்பது மட்டுமல்ல அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என கூறினார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகளுக்கு மலர்செண்டு கொடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். இது தற்போது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.