தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் சமீப காலமாக தனுஷும் சிம்புவும் நண்பர்களாகவே தங்களை வெளிப்படுத்தவும் தவறுவதில்லை.
இந்த நிலையில், மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நாளை வெளியாக இருக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு, மக்களிடையே பெருமை எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஏனென்றால் சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் கூட்டணியில் வெளியாகவிருக்கும் மூன்றாவது படம் இது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் செல்வராகவன் மற்றும் தனுஷின் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, மயக்கம் என்ன மற்றும் காதல் கொண்டேன் திரைப்படங்கள் தான் தனுஷின் திரைப்பட கேரியரில் முக்கிய படங்களாக உள்ளன. அது மட்டுமல்லாமல் கர்ணன் மற்றும் அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணுதான் நானே வருவேன் திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.
அதனால் இப்படி பெரும் எதிர்பார்ப்பை கொண்ட இரண்டு படங்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். நாளை வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நானே வருவேன் டீசரும் நாளை வெளியாக உள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் செலிப்ரேஷனும் நாளை ரோகிணி திரையரங்கில் நடைபெற உள்ளது. அதனால் ரோகினி திரையரங்கு முழுவதும் நானே ஒருவன் திரைப்படத்தின் பேனர் மற்றும் போஸ்டர்கள் தான் உள்ளது. இதனால் சிம்பு மற்றும் தனுஷ் இருக்கும் திரைப்பட ரீதியான மோதல் ஏற்படலாம் என்ற தகவல் பரபரப்பை கிளப்பாமல் இல்லை.