2021 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. (10-09-2022) மற்றும் (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன், பிஜு மேனன்,ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


சைமா விருது நிகழ்ச்சியில் விருதுகள் வென்ற மலையாள பிரபலங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.



  1. சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக டோவினோ தாமஸ் பெற்றார்






     2. சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்திற்காக நிமிஷா சஜயன்  பெற்றார்.


     3. சிறந்த இயக்குநருக்கான விருதை மாலிக் திரைப்படத்திற்காக இயக்குநர் மகேஷ் நாராயண் பெற்றார்.






     4. சிறந்த முன்னணி நடிகைக்கான விருதை காணெகண்ணே திரைப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பெற்றார்.






     5. சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை மின்னல் முரளி திரைப்படத்திற்காக குரு சோமசுந்தரம் பெற்றார்.







     6. சிறந்த அறிமுக இயக்குநருக்கான  விருதை வாங்கு திரைப்படத்திற்காக காவ்யா பிரகாஷ் பெற்றார்.






     7. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை குருப் திரைப்படத்திற்காக நிமிஷ் ரவி பெற்றார்.






     8. சிறந்த துணை நடிகைக்கான விருதை ஜோஜி திரைப்படத்திற்காக உன்னி மாயா கிருஷ்ணன் பெற்றார்.











    10. சிறந்த அறிமுக  நடிகருக்கான விருதை மாலிக் திரைப்படத்திற்காக சணல் அமன் பெற்றார்.






    11. சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை வெள்ளம்  திரைப்படத்திற்காக பிஜி பால் பெற்றார்.






    12. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை ஹோம் திரைப்படத்திற்காக நஸ்லன் கே. கஃபூர் பெற்றார்.