2022 ஆம் ஆண்டிற்கான SIIMA விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது. (10-09-2022) மற்றும் (11-09-2022) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


விருதுகளை வென்று குவித்த டாக்டர்!


சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டாக்டர்.ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், சைமா விருதுகளில் பல விருதுகளை தட்டி தூக்கி உள்ளது. சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றிருக்கிறார்.






சிறந்த அறிமுக நடிகை க்கான விருதை நடிகை பிரியங்கா அருள் மோகன் பெற்றிருக்கிறார்.






மேலும் சிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான விருதுகளை நடிகை தீபா மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் வென்றுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.