Crime : கன்னத்தில் அறைந்த 12ம் வகுப்பு மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து எரித்த இளைஞர்கள்...! உ.பி.யில் கொடூரம்..!

உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர்கள் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிலிபட் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது மதோடன்டா கிராமம். இந்த கிராமத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அந்த மாணவியின் தந்தை விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் 12ம் வகுப்பு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்து ஓய்வு எடுத்து வந்துள்ளார்.

Continues below advertisement

மாணவி வீட்டில் இருந்த அன்று மாணவியின் தந்தை விவசாய பணிக்காக வெளியில் சென்றிருந்தார். மாணவியின் தாயாரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், மாணவியின் தந்தை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அப்போது, அங்கே மாணவி தீயில் கருகி உயிருக்கு போராடிய நிலையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.


இதையடுத்து, உடனடியாக மாணவியை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவிக்கு நேற்றுதான் சுயநினைவு திரும்பியுள்ளது. சுயநினைவு திரும்பிய மாணவி அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

16 வயதான மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் மாணவியை கேலியும், கிண்டலும் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த 12ம் வகுப்பு மாணவி அவரை கிண்டல் செய்த தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.


அனைவர் முன்பும் மாணவி தன்னை அறைந்ததால் தினேஷ்யாதவ் ஆத்திரமடைந்துள்ளார். மேலும், தினேஷ்யாதவ் நண்பர்களும் அவரை கேலி செய்துள்ளனர். இதனால், அந்த மாணவியை பழிவாங்க தினேஷ்யாதவ் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, தனது நண்பர் அமர்சிங்கிடம் உதவி கோரியுள்ளார். இருவரும் மாணவியை பழிவாங்க தக்கசமயம் எதிர்பார்த்து காத்திருந்தனர்,

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை இருவரும் அறிந்துள்ளனர். இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்த தினேஷ்யாதவ் மற்றும் அமர்சிங் இருவரும் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் வாயில் துணி வைத்து இருவரும் கட்டியுள்ளனர். பின்னர், தினேஷ்யாதவ் மற்றும் அமர்சிங் இருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின்னரும், ஆத்திரம் அடங்காத இருவரும் அங்கே இருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். மாணவி வாயில் துணியால் கட்டியதால் மாணவியால் கத்த முடியாமல் வலியில் துடித்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த தந்தை மகளின் நிலை கண்டு பதறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது, மாணவி பிலிபட் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது வரை மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், போலீசார் தினேஷ்யாதவ், அமர்சிங் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க : வேறு சாதி இளைஞரை காதலித்த மகள்..! கழுத்தை நெரித்து கொன்று எரித்த தந்தை..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola