தமிழ்நாட்டில் வெள்ளிதிரையை தொடர்ந்து சின்னத்திரைக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சினிமா நடிகைகளுக்கு மட்டுமில்லீங்க நம்மூரில் சீரியல் நடிகைகளுக்கும் ஃபேன்ஸ் கிளப் எல்லாம் இருக்கிறது. விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒருமுறை தலைகாட்டிவிட்டால் போதும், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை ஒரு கலக்கு கலக்கிவிடலாம்.
அந்தவரிசையில், கலர்ஸ் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா அஞ்சன் திருமணம் என்ற சீரியலில் நடித்தார். இவருடன் சித்து என்பவர் நாயகனாக நடித்தார். ரீல் ஜோடியாக காதலில் கசிந்துருகிய சித்து, ஸ்ரேயா அஞ்சன் சீரியல் நடந்து கொண்டிருந்தபோதே காதல் வயப்பட்டனர். அண்மையில் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
பாசிட்டிவ் ஜோடி என்ற பெயரெடுத்த இந்த இணை அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் பதிவிடும் வீடியோவுக்காக ரசிகர்கள் காத்துக்கிடப்பதும் உண்டு. தற்போது, இந்த காதல் ஜோடி "மோரிஸ் காரேஜ்" காரை வாங்கியுள்ளனர். இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ உடன் மகிழ்ச்சியுடன் மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படத்தின் கீழ் "வெல்கம் ஹோம் பீஸ்ட் என பதிவிட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்து வலிமை படத்தில் நடித்த சைத்ரா ரெட்டி தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அவரைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி புகழ் சஞ்சீவ்வும் தனது தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதற்கு கீழ் ஸ்ரேயா- சித்துவின் ரசிகர்களும் வாழ்த்துகளை சரமாரியை பொழிந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்