தமிழ் சினிமாவின் ஆண்டவர் என போற்றப்படும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பிரபலமான தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். நடிப்பின் மீது மட்டுமின்றி இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன் தனது குழந்தை பருவத்திலேயே பாடகியாக அறிமுகமானவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்த எவர்கிரீன் கிளாசிக் திரைப்படமான 'தேவர் மகன்' படத்தில் இடம் பெற்ற 'போற்றி பாடடி பெண்ணே' என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். 



நடிகையாக அறிமுகம் :


அமெரிக்கா சென்று இசை பயின்றவர் ஹீரோயினாக ஹிந்தியில் 2009ம் ஆண்டு வெளியான 'லக்' படம் மூலம் அறிமுகமானார். தமிழில் அவர் அறிமுகமான முதல் படம் 'ஏழாம் அறிவு'. அதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான “வால்டர் வீரய்யா” மற்றும் “வீர சிம்ஹா ரெட்டி” படங்களில் நடித்திருந்தார்.


காதலரை அறிமுகப்படுத்திய ஸ்ருதி :


சமீபத்தில் தான் சாந்தனு ஹசாரிகா உடனான காதலை பற்றி வெளிப்படையாக சோஷியல் மீடியா மூலம் அறிவித்தார். சாந்தனு ஹசாரிகா மும்பையை சேர்ந்த ஒரு பிரபலமான டாட்டூ கலைஞர். காதலை வெளிப்படையாக அறிவித்த பிறகு இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 



ஸ்ருதியின் புதிய டாட்டூ :


அந்த வகையில் ஸ்ருதி லேட்டஸ்டாக தனது புதிய டாட்டூ குறித்து போஸ்ட் பதிவிட்டுள்ளார். ஸ்ருதி ஹாசன் டாட்டூ போட்டு கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவர். இது வரையில் ஐந்து இடத்தில் டாட்டூ போட்டுள்ளார். தனது சுயத்தின் வெளிப்பாடாக அதை கருதுகிறார். ஸ்ருதி 19 வயதாக இருக்கும் போது முதன் முதலில் தனது பெயரை தமிழில் டாட்டூ போட்டு கொண்டார். காதுக்கு பின்னால் ஒன்று மற்றும் மணிக்கட்டில் ஒரு ரோஜா பூவின் டாட்டூ போட்டுள்ளார்.


அந்த வகையில் சென்ற வாரம் ஸ்ருதி மீண்டும் ஒரு புதிய டாட்டூ ஒன்றை தனது இடது தோளில் போட்டு கொண்டார். தனது தெய்வீக வெளிப்பாட்டை  காட்டும் விதமாக முருகனின் வேல் போன்ற டாட்டூவை போட்டுள்ளார். இதை தனது காதலர் சாந்தனு ஹசாரிகா வடிவமைத்துள்ளதால் அது மிகவும் ஸ்பெஷல் என கூறியுள்ளார். 


பக்தியின் வெளிப்பாடு :


ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஸ்ருதி ஹாசன். முருகப்பெருமானின் வேலுக்கு என்றுமே என் இதயத்தில் ஒரு தனி இடம் உள்ளது. வேல் டாட்டூ போட்டு கொள்வதன் மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்பினேன். சாந்தனு வடிவமைத்த இந்த டாட்டூவை கவுகாத்தியில் போட்டு கொண்டேன். இதன் மூலம் நான் பாதுகாப்பாக உணர்வதற்காகவும், பணிவாக இருப்பதற்காகவும் முருக பெருமானின் வேலை எனது பெயருடன் சேர்த்துக்கொண்டேன். அவர்கள் தான் என் வாழ்க்கையின் மேப் போல இருக்கிறார்கள். என்னால் முடிந்தால் எனது கை முழுவதிலும் டாட்டூ போட்டு கொள்வேன் ஆனால் ஒரு நடிகையாக இருப்பதால் எனக்கு அந்த ஆப்ஷன் கிடையாது" என்றார். இதன் மூலம் கலை மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ருதி.