லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதி ஹாசன்


 நேற்று பிப்ரவரி 6ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம்ஸின் எக்ஸ் தளத்தில் ஸ்ருதி ஹாசன் - லோகேஷ் இணைந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்தது. அந்நிறுவனம், “இனிமேல் டெலுலு இஸ் த புது சொலுலு” என 2கே கிட்ஸ்க்கான மொழியில் பதிவிட்டிருந்தது. மேலும்  இதுவே ரிலேசன்ஷிப், இதுவே சிச்சுவேசன்ஷிப், இதுவே டெல்யூசன்ஷிப்” என்றும் ஹாஷ் டேகுகளைப் பகிர்ந்தது. இதனைத் தொடர்ந்து இது படமா, பாடலா என ரசிகர்கள் பல்வேறு குழப்பம் எழுந்தது. ஸ்ருதி ஹாசனின் உருவாக்கியிருக்கும் புதிய பாடல் ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதைத் தெரிவிக்கவே ராஜ்கமல் நிறுவனம் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.


ஸ்ருதி ஹாசனின் புதிய பாடல்






சமீபத்தில் துபாயின் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறந்த பாடகருக்கான விருதினை தனது தந்தை கமல்ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஸ்ருதி ஹாசனின் பாடல் ஒன்று ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக இருப்பதாக அறிவிப்பு வந்தது. சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் எழுதி, பாடிய பாடலான  ‘மான்ஸ்டர் மிஷின்‘ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இதனைத் தொடர்ந்து தற்போது அவர் புதிதாக ஒரு பாடலை எழுதியுள்ளதாகவும், இந்தப் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விருப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் என இரு முகங்கள் கொண்ட லோகேஷ் கனகராஜ் இந்தப் பாடலில் நடிக்க ஆச்சரியமளிக்கும் வகையில் சம்மதம் தெரிவித்துள்ளார்.


இந்தப் பாடலின் மியுசிக் வீடியோவில் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லோகேஷ் கனகராஜ்


 லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக திரைக்கதையை தற்போது அவர் எழுதி வருகிறார். இப்படத்தின் பூஜை மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என்றும், ஐமேக்ஸ் கேமராவில் முழுவதுமாக படம் ஷூட் செய்யப்பட உள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இப்படம் தனது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வராது என லோகேஷ் அறிவித்துவிட்ட நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.