தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒருபுறம் கோலோச்சி வந்தாலும் மற்றொருபுறம் தன் காதல் வாழ்க்கையையும் கொண்டாட்டமாக வாழ்ந்து ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.


அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தன் காதலருடன் லன்ச் டேட் சென்று பகிர்ந்துள்ள புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன.


மும்பையைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை ஸ்ருதி தற்போது காதலித்து வருகிறார். தங்கள் காதலை பொதுவில் அறிவித்த பிறகு ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து தங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 




அந்த வகையில் முன்னதாக தன் காதலருடன் லன்ச் டேட் சென்று ஸ்ருதி ஹாசன் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.





முன்னதாக காதல், திருமணம் பற்றி தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய ஸ்ருதி ஹாசன்,  “திருமணம் ஒரு நம்பிக்கை அல்ல, திருமணம் கல்வி நிலையம் போன்றது. கல்வி நிலையத்துக்கு மதிப்பும் மரியாதையும் இல்லை என்றால் இவ்வளவு ஆண்டுகள் அது கடந்திருக்க முடியாது.


சமூகத்துக்கு எது பிடிக்குமோ எது தேவையோ அதனை நான் ஏற்பேன். திருமணம் நடந்தால் நடக்கும், உறுதியாக சொல்ல முடியாது. அதே சமயம் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக சங்கராந்தி ஸ்பெஷலாக டோலிவுட்டில் வெளியான வால்ட்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். 


தொடர்ந்து, கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தற்போது பான் இந்தியா படமாக உருவாகி வரும் சலார் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.


இந்தப் படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் கன்னட சினிமாவில் கால் பதிக்க உள்ளார். தமிழில் இறுதியாக விஜய் சேதுபதி ஜோடியாக மறைந்த இயக்குநர் ஜனநாதனின் இயக்கத்தில் லாபம் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.


இந்நிலையில், இந்தி, தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருப்பதால் தமிழ் சினிமாவில் நடிக்க முடியவில்லை என்றும், தன் அப்பா கமல்ஹாசனை பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டதாகவும் தன் சமீபத்திய நேர்காணலில் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.  ஸ்ருதி ஹாசன் தற்போது ‘த ஐ’ எனும் ஆங்கிலப் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : April 14 New Release : இந்த தமிழ் புத்தாண்டில் வெளியாகும் புதிய தமிழ் படங்கள் என்னென்ன? ஆவலுடன் காத்திருக்கும் சினிமா பிரியர்கள்